ஈரோடு மாவட்டத்தில் விரைவில் திறன் மிக்க பிஎஸ்என்எல் 4ஜி சேவை

ஈரோடு மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் பொதுமேலாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-06 03:30 GMT

பிஎஸ்என்எல் 4ஜி சேவை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் வெகு விரைவில் திறன் மேம்படுத்தப்பட்ட முழு அளவிலான 4ஜி சேவை தொடங்கப்படவுள்ளதால், பிஎஸ்என்எல் 2ஜி , 3 ஜி சிம்காா்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் 4ஜி சிம்களாக மாற்றிக்கொள்ளலாம் என, ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளா் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளாா். 

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் 4ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் தயாராகி வருகிறது. வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைகளை பெறுவதற்கு 4ஜி சிம்கார்டாக மாற்றிக்கொள்ள வேண்டும். 2ஜி, 3ஜி சிம்கார்டு வைத்துள்ளவர்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள், தொடர்பு அலுவலகங்கள் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் கட்டணமின்றி இலவசமாக 4ஜி சிம்கார்டாக மாற்றி கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 324 தொலைத்தொடர்பு கோபுரங்களும் மேம்படுத்தப்பட்ட 4ஜிதொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. இவை அனைத்தும் 5ஜி திறன் கொண்டதாக இருக்கும். மேலும் மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜிக்கு எளிதாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மொபைல் டேட்டா வேகம் போட்டியாளர்களை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News