சிபிசிஎல் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

சிபிசிஎல் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2024-05-23 13:03 GMT

நாகை சிபிசிஎல் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை  தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் சென்னை மெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் என்று அழைக்கப்படும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் மீனவர்களும் சுற்றுச்சூழலால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அப்போது சிபிசிஎல் நிறுவனம் சார்பாக ஆஜரான வக்கீல் 10 டன் அளவிலான கச்சா எண்ணெய் கடலில் கலந்தது எனவும், சிபிசிஎல் நிறுவனம் உறிஞ்சு கருவிகள் மூலம் எண்ணெய் அகற்றப்பட்டதால் சுற்றுச்சூழல் தாக்கம் ஏற்படவில்லை. எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை தற்போது அப்பகுதியில் சிபிசிஎல் நிறுவனத்தின் குழாய் இல்லை எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் இது போன்ற செயல் தண்டனைக்குரியது. எனவே சிபிசிஎல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் எண்ணெய் கசிவு ஏற்படுத்திய குற்றத்திற்காக சிபிசிஎல் நிறுவனம் 5 கோடி ரூபாய் தொகையை அபராதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைக்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News