ஈரோடு டி.என்.பாளையம் வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணி..!

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை (இன்று) தொடங்கியது.

Update: 2024-05-23 11:45 GMT

டி.என்.பாளையம் வனச்சரக கொங்கர்பாளையம் காவல் சுற்றில் யானை கணக்கெடுப்புப் பணியின் போது எடுத்த படம்.

டி.என்.பாளையம் வனச்சத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை (இன்று) தொடங்கியது.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி மூன்று நாட்கள் நடக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச்சரக பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்புப் பணி இன்று (மே.23) வியாழக்கிழமை காலை தொடங்கியது.

டி.என்.பாளையம் வனச்சரகத்தில் உள்ள கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், கொங்கர்பாளையம், விளாங்கோம்பை, துர்கம், கடம்பூர் கிழக்கு என ஏழு காவல் சுற்றுகளிலும் யானைகள் கணக்கெடுக்கும் பணி டி.என்.பாளையம் வனச்சரகர் மாரியப்பன் தலைமையில் தொடங்கியது.

நேரில் கண்டறிதல், நேர்கோட்டு பாதையில் சாணம் எண்ணுதல், நீர் நிலைகளை கண்காணித்தல் உள்ளிட்ட முறைகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று யானையை நேரடியாகப் பார்த்து அதன் பாலினம் மற்றும் பெரிய யானை, சிறிய யானை, குட்டி மற்றும் மக்னா என வகைப்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதனையடுத்து, நாளை, நாளை மறுநாள் வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு யானை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News