அந்தியூர் அருகே சமுதாயக் கூடம் கட்டும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சியில் புதிய சமுதாயக் கூடம் கட்டும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

Update: 2022-06-10 05:30 GMT

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சி யில் புதிய சமுதாய கூடம் கட்டும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜி.எஸ்.காலனியில் ரூ.38.60 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படும், இக்கூடத்தை அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தார்.

அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மைக்கேல்பாளையம் ஊராட்சித் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார். ஊராட்சித் துணைத் தலைவர் சக்திவேல், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News