வெந்நீர்ல எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கிற பழக்கம் இருக்கா?..அப்ப அது ஆரோக்கியமானதான்னு தெரிஞ்சுக்கோங்க..!
வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் காணலாம்.;
எலுமிச்சை நீரின் மருத்துவ பயன்கள்
நிறைய பேருக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைல ஒண்ணுதா அதிக கொழுப்பு இருக்குறது. சூடான எலுமிச்சை தண்ணீர் குடிப்பது அதிக கொழுப்பை குறைக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
காலை நேர எலுமிச்சை நீரின் பலன்கள்
காலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எலுமிச்சை கலந்த வெந்நீர், உடலில் ஜீரணமண்டலத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் அதிகமாக உள்ளது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.
எடை குறைப்பு மற்றும் உடல் ஆரோக்கியம்
எலுமிச்சை சாறு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை குறைப்பில் உதவும். ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸின் மூலம் குறைந்தது 6 கிராம் கலோரிகள் வரை எரிக்கப்படும்.
சரும மற்றும் இதய ஆரோக்கியம்
எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சருமத்தை இளமையாக வைக்கும். மேலும், இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
வெறும் வயிற்றில் குடிக்கும் முறை
உங்களின் உடல் எடையில் மாற்றம் தெரிய எலுமிச்சை ஜூஸில், சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.
எச்சரிக்கை
- அமிலத்தன்மை: வயிற்றுப் புண், அசிடிட்டி உள்ளவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
- பற்களின் எமால்: வெந்நீர் குடித்த பின்பு வாய் கொப்பளிப்பது நல்லது.
- கர்ப்ப காலம்: கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
முக்கிய குறிப்பு
இது ஒரு பொதுவான தகவல் மட்டுமே. அளவுக்கு மீறி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, மிதமான அளவில் குடிப்பது நல்லது. ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.