தொடர் கனமழை எதிரொலி நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு

தொடர் கனமழை எதிரொலி நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு பேரூர் படித்துறை தர்ப்பண மண்டபம் வெள்ளத்தால் சூழ்ந்தது

Update: 2022-08-10 13:15 GMT

நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழை எதிரொலி நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு பேரூர் படித்துறை தர்ப்பண மண்டபம் வெள்ளத்தால் சூழ்ந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரை தொட்டவாறு தண்ணீர் செல்கிறது தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் பேரூர் படித்துறை மற்றும் தர்ப்பணம் மண்டபம் நீரில் மூழ்கியது இதனால் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீரில் இறங்க பேரூர் பேரூராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.

  தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதை நின்று பார்த்து செல்பி எடுத்து வரும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கின் மூலம் எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர், மேலும் கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது இதனால் குளம் குட்டை நீர் வழி தடங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது.

தொடர்ந்து நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பேரூர் வேடப்பட்டி சாலை நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நொய்யல் ஆறு அருகே வேடப்பட்டி சாலை செல்வதால் ஆற்றுத்தண்ணி சாலை முழுவதும் மூழ்கி காணப்படுகிறது. அதனால் அருகே டாஸ்மார்க் மதுபான கடை இருப்பதால் வேடப்பட்டியில் இருந்து பேரூர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு வர முடியாமல் குடிமகன்கள் தவித்து வருகின்றனர். உடனடியாக எங்களுக்கு ஆற்றுநீர் இந்த பகுதிக்கு வருவதை தடுக்க சிமெண்ட் சுவர் அமைக்க வேண்டும் என்றும் இப்பகுதியில் ஒரே கடை மட்டுமே உள்ளதால் மது பிரியர்கள் புலம்பியபடி கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News