மோடி பிறந்த நாள்; கோவையில் பா.ஜ., வினர் உற்சாகம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை, கோவையில் 72 கிலோ பிரமாண்ட கேக் வெட்டி பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2022-09-19 17:44 GMT

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை, கோவையில் 72 கிலோ பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடிய பா.ஜ. கட்சி.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை சேவை தினங்களாக பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் 72 கிலோ எடையில், பிரமாண்டமான கேக் வெட்டி, வேலாண்டிபாளையம் மண்டல 42 வது டிவிசன் பா.ஜ வினர் கொண்டாடினர்.


தொடர்ந்து அந்த பகுதி ,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு 72 புத்தகப்பை,72 தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி,சேலை,72 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து பா.ஜ தொண்டர்கள் இரத்ததானம் செய்தனர். விழா நிகழ்ச்சிகளில் அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News