வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு

Coimbatore News- வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு அளித்துள்ளது.;

Update: 2024-04-26 12:30 GMT

Coimbatore News- காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாலாங்குளம் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளது. அங்கு படகு இல்லம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் படகு இல்லம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு படகு சவாரிக்கு பல்வேறு வகையான படகுகளுக்கு 200 ரூபாய் முதல் துவங்கி 1000 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகம் என படகு இல்லம் அமைத்ததில் இருந்தே பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கட்டணத்தை குறைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் உரிமைத் துறையினர் அதன் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து அவர் கூறுகையில், இந்த விலையானது ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு பாரமாக இருக்கும் எனவும், மாநகராட்சி ஆணையாளர் இதில் தலையிட்டு கட்டணத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு குறைத்தால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என கூறினார். மேலும் அங்கு பார்க்கிங் வசதி இல்லாததால் அடிக்கடி விபத்துகளும், கூட்ட நெரிசலும் ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் கரும்புக்கடை பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதாகவும், அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த படகு இல்லத்தை இடமாற்றம் செய்ய சில தினங்களுக்கு முன்பு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News