தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..
பெங்களூரு ராமேஸ்வரம் கபேயின் புதிய அவதாரம், இனி தெருவுக்கு தெரு மாஸ் தான் என்ற நிலையை எதிர்காலத்தில் உருவாக்கும்.;
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே வை உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின், மிகப்பெரிய பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் இந்த உணவகம் இயங்கி வருகிறது. வழக்கம் போல் மக்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது.
பெங்களூரில் மட்டுமே இயங்கி வந்த தென்னிந்திய உணவகமான ராமேஸ்வரம் கஃபே தற்போது பிற நகரங்களுக்கும் படையெடுக்க துவங்கியுள்ளது. இதேவேலையில் பல முக்கியமான இடத்தில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கடைகள் வைத்து இயக்குவது கடினம் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் மதிப்பையும், மரியாதையும் பெற்ற ராமேஸ்வரம் கஃபே கடை, தற்போது அதிநவீன சமையலறை வசதிகள் கொண்ட உணவு ட்ரக்கை அறிமுகப்படுத்தியது மூலம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ நாடுகளில் புட் டிரக் என்பது வெற்றி பெற்ற வர்த்தக மாடலாகும். இந்தியாவிலும் தற்போது பல பெரு நகரங்களில் புட் டர்க் பிஸ்னஸ் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது, பல இளைஞர்கள் சொந்தமாகக் கடையைத் திறக்கும் முன்பு புட் டிரக் முறையை ட்ரை செய்து வருகின்றனர்.
மக்களும் இந்த புட் டிரக் முறையை ரசிப்பது மட்டும் அல்லாமல் ஏற்றுக்கொள்ளவும் துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக ராமேஸ்வரம் கஃபே போன்ற பெரிய மற்றும் பிரபலமான பிராண்ட் இப்பிரிவில் இறங்கியுள்ளது புதிய மாற்றத்தை சந்தையில் ஏற்படுத்தும், பிற பிரபலமான பிராண்டும் களத்தில் இறங்கும்.
ராமேஸ்வரம் கஃபே-வின் புட் ட்ரக் அதிநவீன சமையலறை வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம், ஒரே நேரத்தில் 120 இட்லிகளைத் தயாரிக்க முடியும். மேலும், இது நிறுவன நிகழ்வுகள் அல்லது தனிப்பட்ட விழாக்களுக்கு ஏற்ப கஸ்டமைஸ் கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“ராமேஸ்வரம் ஆன் வீல்ஸ்..! என்ற வாசகத்துடன் டிவிட்டரில் ராமேஸ்வரம் கஃபே-வின் புதிய புட் ட்ரக் டிரெண்டாகி வருகிறது…!