பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-21 05:33 GMT

அந்தியூர், ஜன.21:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதவிழா கொண்டாடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் பள்ளியின் தலைமையாசிரியர் அர்த்தநாரி, அந்தியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி முன்னிலை வகித்தனர்.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

சிறப்பு அழைப்பாளர்களாக கோபி தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் கதிர்வேல் மற்றும் திருப்பூர் சாலை பாதுகாப்பு உதவி கோட்ட பொறியாளர் குணவதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து டிஜிட்டல் முறையில் வீடியோ திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள்


♦ தலைக்கவசம் அணிவது

♦ சாலை விதிகளை கடைபிடிப்பது

♦ சாலையில் உள்ள குறியீடுகளின் விளக்கங்கள்

சாலை பாதுகாப்பு உறுதி மொழி

தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

விழாவில் கலந்துகொண்டோர்

♦ நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளர்கள் பாபு சரவணன், சிவசுப்பிரமணியன்

♦ சாலை ஆய்வாளர்கள் கிருஷ்ணசாமி, ரமேஷ்ரவிக்குமார்

♦ பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன்

♦ பள்ளி மாணவர்கள்

Tags:    

Similar News