அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-01-21 04:30 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட 55 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இதில், 8 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இதன், மூலம் 47 வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று (ஜன.20) திங்கட்கிழமை நள்ளிரவு வரை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதில், வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜன.21) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.30 மணி அளவில் இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்களை ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.மனிஷ்.என் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

Tags:    

Similar News