தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!

தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-21 06:17 GMT

ஈரோடு, ஜன. 21:

ஈரோடு மாநகராட்சி 47வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று 17 தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை

ஈரோடு மாநகராட்சி 47வது வார்டில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

தெருநாய்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்து


மேலும் கடந்த சில நாட்களாக தெருநாய்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்தில் சிக்கியுள்ளனர்.

பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் மாநகராட்சி நடவடிக்கை

இது குறித்து சூரம்பட்டி 3வது மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு 47வது வார்டு பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் நேற்று காலை காந்திஜி ரோடு, பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

17 தெருநாய்கள் பிடித்து கருத்தடை மையத்தில் விடப்பட்டது

இதில் 17 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு சோலாரில் உள்ள கருத்தடை மையத்தில் விடப்பட்டது.

Tags:    

Similar News