3,000 கூடுதல் ஆசிரியா்களுக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு
அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேருக்கு தற்காலிக பணி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1.8.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3,000 உபரி பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தது. இதனால் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியா்களுக்கு 18.5.2022 முதல் 17.5.2023 வரை மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் மாணவ, மாணவிகள் சேர்க்கை அனைத்து அரசு பள்ளிகளிலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மேற்கண்ட ஆசிரியா்களின் பணிக்காலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் அவா்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்குவதற்கான விரைவு ஆணையை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது. இதன்படி அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியா்களுக்கு மே 18-ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பும் ஊதியமும் வழங்கப்படும். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்த ஆசிரியர்களுக்கு பணி நீடிப்பு தொடர்ந்து வழங்கப்படும். இந்நிலையில் இவர்களை பணி நிரந்தரம் செய்ய தேவையான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.