நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!
இரவு 7 மணிக்கு மேல் தேநீர் அருந்தினால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. இது என்னென்ன உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை இங்கே பார்க்கலாம்.;
தேநீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
தேநீர் என்பது பலருக்கு பிடித்த பானம். ஆனால், அதிக அளவில் தேநீர் குடிப்பதால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். பலர் காலையில் எழுந்தவுடன் டீ, காபி போன்ற சூடான பானங்களை குடிப்பார்கள்.
நீர் இழப்பு
அதிக அளவு தேநீர் குடிப்பதால் உடலில் நீர் இழப்பு ஏற்படலாம். நீங்கள் அடிக்கடி தேநீர் அருந்தினால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்.
அஜீரணம்
அதிக அளவில் டீ குடிப்பது அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உறக்கமின்மை
தேநீரில் காஃபின் அதிகம் உள்ளது. இது ஆற்றலை உருவாக்குகிறது. நீங்கள் படுக்கைக்கு முன் தேநீர் குடித்தால், காஃபின் உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.
இதயத் துடிப்பு
தேநீரில் உள்ள காஃபின் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இரவில் தேநீர் அருந்துவதால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இது நரம்பு தூண்டுதலையும் அதிகரிக்கிறது.
வயிற்று புண்
அதிக அளவு தேநீர் குடிப்பது வயிற்றுப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. மாலை டீ குடித்துவிட்டு, சிலருக்கு இரவில் வயிற்றில் எரிச்சல் அல்லது அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம்.