அரசியல் கட்சிகளுக்கு தற்காலிக சின்னம்: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

அரசியல் கட்சிகளுக்கு தற்காலிக சின்னம் ஒதுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Update: 2023-08-06 15:29 GMT

ராபர்ட் கிறிஸ்டி.

தேர்தல் அறிவிப்புக்கு பின் அரசியல் கட்சிகளுக்கு தற்காலிக சின்னங்களை தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும் என்று ஹெச்.எம்.கே.பி மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய தொழிலாளர் மற்றும் விவசாய கூட்டமைப்பின் (ஹெச்.எம்.கே.பி.) மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சுதந்திர இந்தியா நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் நிலையில் 60  சதவீதம் மக்கள் வறுமையில் வாடும் நிலை உள்ளது. அரசியல் சார்ந்த அனைத்து ஊழல்வாதிகளும் பல தலைமுறை வாழ்விற்கான செல்வங்களையும், சுகபோக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி ஊழல் வாதிகளே தொடர்ந்து எம்.எல்.ஏ, எம்.பி, கவுன்சிலர் போன்ற பதவிகளை பரம்பரை பரம்பரையாக பெற்று வருகின்றனர்.

வறுமை கோட்டு மக்களின் மன எண்ணங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சின்னங்களே பதிவாகி கொண்டிருக்கிறது. சுமார் 40 வயதிற்கு மேல் வாக்காளர்கள் தங்கள் சார்ந்த அரசியலின் ஒரே எண்ணத்தில் பக்குவப்பட்டு உள்ள நிலைமையை மாற்றிட வேண்டும். இன்றைய இளைஞர்களின் அறிவு சார்ந்த எண்ணங்களையும் செயல்படுத்திட வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆராயாமல் சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்கும் நிலை உள்ளது. ஊழலுக்கும், தேச ஆரோக்கியத்திற்கும், மதவாதத்திற்கும் இனவாதத்திற்கும், மக்கள் விரோத செயல்பாட்டை தடுத்திட வேண்டும்.

எனவே இனிவரும் காலங்களில் தேர்தலில் வேட்பாளர்களுக்கு தேர்தல் காலங்களில் மட்டும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தற்காலிக தேர்தல் சின்னங்களை ஒதுக்க வேண்டும். அல்லது எண்ணின் சின்னங்களையோ தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கும் பட்சத்தில் மக்களின் அரசியல் அடிமை சின்னத்தின் சிந்தனையிலிருந்து மாற்றப்படுவார்கள்.

தேர்தலில் லஞ்சம் பெற்று வாக்களிக்கும் நிலையும், தேர்தல் பண விநியோகமும் ஒழியும். ஆளும் அரசாங்கம் தேர்தல் வாக்கு இயந்திரத்தில் தங்களின் சின்னங்களை முன்கூட்டியே பதிவிடும் என்ற குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பலியாகாது. நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு ராபர்ட் கிறிஸ்டி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News