தளபதி 69 படத்தின் தலைப்பு இதுவா? அரசியல் பின்னணியோ?

தளபதி 69 படத்தின் தலைப்பு இதுவா? அரசியல் பின்னணி இருக்கலாம் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Update: 2024-10-01 07:03 GMT

தளபதி விஜய் அடுத்து அரசியல் களத்துக்கு செல்ல இருப்பதால் தனது கடைசி படமாக தளபதி 69 மட்டும்தான் வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ரசிகர்களுக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் கடைசி படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமும் பல திட்டங்களுடன் படத்தை துவங்க இருக்கிறது.

தளபதி 69 பூஜை எப்போது? | Thalapathy 69 pooja ceremony

தளபதி விஜய் நடிக்கும் தற்போதைக்கு கடைசி படமாக கூறப்படும் தளபதி 69 படத்தின் பூஜை வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறதாம்.

தளபதி 69 ஷூட்டிங் அப்டேட் | Thalapathy 69 shooting date

அக்டோபர் 5ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் காலையில் சென்னையின் பிரபல படப்பிடிப்புத் தளத்தில் இந்த படத்தின் முதல் காட்சியை துவங்குகிறார்கள். முதல் காட்சியே பாடல் காட்சி என்றும் அதற்கான டம்மி லிரிக் டியூன் அனிருத் கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 69 தலைப்பு என்ன? | Thalapathy 69 movie name

படத்தின் தலைப்பு தமிழில் இருக்கும் என்றும், நிச்சயமாக ஆங்கிலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. படத்தின் தலைப்பை இன்னும் உறுதி செய்யவில்லையாம். அதேநேரம் 3 தலைப்புகளுடன் ஹெச் வினோத் காத்திருக்கிறாராம்.

விக்ரமாதித்தன் எனும் தலைப்பும் அதில் ஒன்று என தகவல்கள் வெளிவந்துள்ளன.

தளபதி 69 இசை | Thalapathy 69 Music

தளபதி 69 படத்தில் துள்ளலாக ஆட்டம்போடும் பாடல்களுடன் அர்த்தமுள்ள அறிவுரைக் கூறும் ஒரு இன்ட்ரோ பாடலும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பாடலைத் தான் முதலாவதாக படம்பிடிக்க இருக்கிறதாம் படக்குழு. மொத்தம் 5 பாடல்கள் இருக்கலாம் மற்றும் அதனுடன் பின்னணி இசைக்கான பிஜிஎம்களும் இணைக்கப்படலாம்.

தளபதி 69 ஹீரோயின் | Thalapathy 69 heroine

படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் ஏற்கனவே விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே. மற்றொருவர் தற்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர். இவர் ஏற்கனவே தனுஷ், அஜித் ஆகியோருடன் நடித்துள்ளார். இது தமிழில் 4வது படமாக இது அமையும்.

தளபதி 69 விஜய் சம்பளம் | Thalapathy 69 vijay salary

இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை அதிகாரப்பூர்வமாக நாம் அறிந்துகொள்ள முடியாது.

Tags:    

Similar News