வெயில் காலம் வந்துவிட்டாலே நமக்கு இளநீர், நுங்கு தான் ஞாபகம் வரும். வெயில் காலத்துல இளநீர் கூட ஈஸியா கெடச்சிரும் ஆனா இந்த நுங்கு தான் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
உடல் வெப்பத்தை குறைக்கிறது
கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பத்தால் உடல் பாதிக்கப்படலாம். நுங்கு அதிக அளவு நீர்ச்சத்து கொண்டிருப்பதால் உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
- நுங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
- பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுகிறது.
இரத்தத்தை சுத்திகரிக்கிறது
நுங்கில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இரத்தத்தை சுத்திகரித்து, நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
கர்ப்பிணிகளுக்கான நன்மைகள்
- கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிக்கும்.
- மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
தோல் ஆரோக்கியம்
- கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்கிறது.
- வேர்க்குரு நீங்க உதவுகிறது.
- தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.