தினம் 1 டம்ளர் வேப்பிலை சாறு...! வேப்பிலை ஜூஸ் குடித்தால் உங்க உடம்புல என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா....? | Neem Juice Benefits In Tamil
Neem Juice Benefits In Tamil - வேப்பிலை சாறு குடிப்பதால் ஏற்படும் பயன்களை இத்தொகுப்பில் காணலாம். | Neem juice benefits in tamil;
By - charumathir
Update: 2024-11-26 04:12 GMT
வேப்பிலையின் அற்புத மருத்துவ பயன்கள்
வேப்பிலை என்பது நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த மூலிகை. இது பெரும்பாலும் கோவில்களில் தான் இருக்கும். அம்மை போன்ற நோய்க்கு தீர்வாக உள்ளது.
வேப்பமரம் ஆயுர்வேதத்தில் இயற்கையின் மருந்தகமாக அறியப்படுகிறது.
வேப்பிலையின் சத்துக்கள்
- ஆன்டி பாக்டீரியல் பண்புகள்
- அழற்சி எதிர்ப்பு பண்புகள்
- ஆன்டி பாராசிட்டிக்
- ஆன்டி டயாபெட்டிக்
வேப்பிலை சாறின் பயன்கள் - Neem Leaves Juice
1
செரிமான ஆரோக்கியம்
செரிமான பிரச்சனைகள், வயிற்று வீக்கம் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
2
நோய் எதிர்ப்பு சக்தி
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடுகிறது.
3
இரத்த சுத்திகரிப்பு
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
4
நீரிழிவு கட்டுப்பாடு
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
சரும பராமரிப்பு
வேப்பிலை சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது:
- பருக்கள் மற்றும் கொப்புளங்களை குணப்படுத்துகிறது
- சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை பாதுகாக்கிறது
- இயற்கை அழகை மேம்படுத்துகிறது
முடி வளர்ச்சி
வேப்பிலை சாறு முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது:
- பொடுகு பிரச்சனையை தீர்க்கிறது
- முடி உதிர்வை தடுக்கிறது
- முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
குறிப்பு: வேப்பிலை சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது சிறந்தது.