Reason For Synus And Remedies சைனஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?...படிங்க...
Reason For Synus And Remedies தூசி ஒவ்வாமை என்பது சைனஸ் உருவாகும் ஒரு பொதுவான காரணியாகும். தூசு, மகரந்தம், புகையிலை புகை போன்ற ஒவ்வாமை தூண்டிகள் மூக்கில் எரிச்சலை ஏற்படுத்தி வீக்கத்தை உண்டாக்கலாம். இது சைனஸ் பிரச்சனையை மேலும் மோசமாக்கலாம்.
Reason For Synus And Remedies
சைனஸ் குழிகள் என்பது நமது மண்டை ஓட்டில் உள்ள காற்று நிரப்பப்பட்ட இடைவெளிகள். இந்த சைனஸ் குழிகள் சளியை உற்பத்தி செய்கின்றன. இந்த சளி, நமது மூக்கின் உட்புறத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. மேலும், நாம் சுவாசிக்கும் காற்றை வடிகட்டி தூய்மைப்படுத்தி நுரையீரலுக்கு அனுப்புகிறது. சைனஸ் அழற்சி (Sinusitis) என்பது, இந்த சைனஸ் குழிகளில் ஏற்படும் ஒரு வீக்கமாகும். இது, வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சைகளினால் கூட ஏற்படலாம்.
சைனஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்
தூசி ஒவ்வாமை: தூசி ஒவ்வாமை என்பது சைனஸ் உருவாகும் ஒரு பொதுவான காரணியாகும். தூசு, மகரந்தம், புகையிலை புகை போன்ற ஒவ்வாமை தூண்டிகள் மூக்கில் எரிச்சலை ஏற்படுத்தி வீக்கத்தை உண்டாக்கலாம். இது சைனஸ் பிரச்சனையை மேலும் மோசமாக்கலாம்.
வைரஸ் தொற்று: ஜலதோஷம் அல்லது சளி போன்ற வைரஸ் தொற்று சைனஸ் அழற்சியை ஏற்படுத்தும். மேலும், இந்த தொற்று ஏற்கனவே உள்ள ஒவ்வாமையினாலான சைனஸ் பிரச்சனையை மோசமாக்கிவிடும்.
Reason For Synus And Remedies
பாக்டீரியா தொற்று: சில நேரங்களில், வைரஸ் தொற்றை தொடர்ந்து பாக்டீரியா தொற்று ஏற்படுவதும் உண்டு. இது சைனசில் வீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி: நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும்போது, சைனஸ் அழற்சி போன்ற நோய்கள் உருவாக வாய்ப்பு அதிகம்.
மூக்கில் வளரும் கட்டிகள்/பாலிப்கள் (Nasal Polyps): சைனசின் உள்ளே சிறிய சதைக் கட்டிகள் போன்றவை (பாலிப்கள்) உருவாவதும் சைனஸ் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம்.
சைனஸ் அறிகுறிகள்:
மூக்கடைப்பு: இது சைனஸ் பிரச்சனையில் முதன்மையான அறிகுறியாகும். மூச்சுவிடுவதில் சிரமம், மூக்கிலிருந்து வெளியேறுவது தடைபடும்.
முகத்தில் வலி அல்லது அழுத்தம்: கண்களுக்கு பின்னால், நெற்றிப்பகுதியில் அல்லது கன்னங்களில் வலி அல்லது அழுத்தம் ஏற்படலாம். குனிவதன் மூலம் இந்த வலி அதிகரிக்கலாம்.
மஞ்சள் அல்லது பச்சை சளி: சைனசில் கட்டியாக இருக்கும் மஞ்சள் அல்லது பச்சை நிற சளி வெளியேறலாம்.
காய்ச்சல்: சைனஸ் தொற்று அதிகமாகும் பொழுது, லேசான காய்ச்சல் ஏற்படுவதுண்டு.
மோப்ப சக்தி குறைபாடு: சைனஸ் பாதிப்பு காரணமாக, வாசனை உணர்தல் மற்றும் சுவை அறிதல் குறைந்துவிடலாம்.
சைனஸ் குணமாகுமா?
வைரஸ் தொற்றால் ஏற்படும் சைனஸ் பொதுவாக சில நாட்களில் தானாகவே குணமாகத் தொடங்கும். ஒவ்வாமை காரணமாக ஏற்படும் சைனஸுக்கு, மருத்துவரின் பரிந்துரை மருந்துகள் இன்றியமையாதவை. பாக்டீரியா தொற்றுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவைப்படும். எனவே, சைனஸ் அறிகுறிகள் இருந்தால், உரிய நோயறிதலுக்கும் சிகிச்சைக்கும் மருத்துவரை அணுகுவது நல்லது.
Reason For Synus And Remedies
சைனஸ்: வீட்டு வைத்தியங்கள்
ஆவி பிடித்தல்: ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை வைத்து, அதில் இருந்து வரும் ஆவியை முகத்திற்கு அருகில் கொண்டுவந்து பிடிக்கலாம். இந்த ஆவி, மூக்கடைப்பைப் போக்கி சைனசிலுள்ள சளியை இளகவைக்கும்.
உப்புநீர் மூக்குவழிச் சலவை: வெதுவெதுப்பான உப்புநீரால் நாசிப்பாதையை கழுவுவது சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும்.
இஞ்சி மற்றும் மஞ்சள்: இஞ்சி மற்றும் மஞ்சள் கொண்ட சூடான பானங்கள் வீக்கத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஈரப்பதம்: அறையில் ஈரப்பதத்தை அதிகரிக்க 'ஹியூமிடிஃபையர்' கருவியைப் பயன்படுத்தலாம். இது சைனசை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
தடுப்பு முறைகள்
ஒவ்வாமை தூண்டிகளைத் தவிர்ப்பது: முடிந்தவரை, தூசு, மகரந்தம், விலங்குகளின் முடி போன்ற, உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது.
கைகளை அடிக்கடி கழுவுதல்: கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுவது தொற்று நோய்களை தவிர்க்க உதவும்.
சீரான உணவு: வைட்டமின் மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும், சைனஸ் உட்பட பல நோய்களை எதிர்த்துப் போராடும்.
Reason For Synus And Remedies
சைனஸ் - நிரந்தரமா? வாழ்நாள் சிகிச்சையா?
சைனஸ் பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் "sinusitis" என்று பெயர். இதில் பல வகைகள் உள்ளன. சில வகை சைனஸ் தற்காலிகமாக சில நாட்கள் தொந்தரவு தந்துவிட்டு தானாகவே குணமாகலாம். வேறு சில வகைகள் சற்று தீவிரமானதாக இருக்கும். அது 'நாட்பட்ட சைனஸ்' (Chronic Sinusitis) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை சைனஸ் பிரச்சனை பல மாதங்கள் நீடித்து இருக்கும்.
சைனஸ் பிரச்சனை முற்றிலும் சரியாகுமா அல்லது வாழ்நாள் இதற்கு மருந்துகள் சாப்பிட வேண்டியதிருக்குமா? என்பதை, அந்த நபருக்கு இருக்கும் சைனஸின் வகை மற்றும் தீவிரத்தை பொறுத்துதான் சொல்ல முடியும். ஒவ்வாமை சார்ந்து இருக்கும் சைனஸ் அடிக்கடி தொல்லை தந்து கொண்டே இருக்கலாம். இதை சில மருந்துகளின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் பல சைனஸ் பிரச்சனைகள் முற்றிலுமாக குணமாகும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் நாசிப்பாதையில் உள்ள தடைகளை (பாலிப்கள் போன்றவை) நீக்கிய பிறகு, முழுமையான நிவாரணம் கிடைக்கலாம். மொத்தத்தில், சைனஸ் என்பது ஒரு தீர்க்கக்கூடிய பிரச்சனையே. ஆனால், மருத்துவர் ஆலோசனை, சரியான மருந்துகள், வாழ்க்கை முறை ஒழுங்கு அவசியம்.
Reason For Synus And Remedies
சைனஸ் நோயாளிகளுக்கான உணவு முறைகள்
மசாலா குறைந்த உணவு: காரமான உணவுகள் சைனஸ் வீக்கத்தை அதிகமாக்கலாம். எனவே, உணவில் மிளகாய் போன்றவற்றை குறைப்பது நல்லது.
வைட்டமின் நிறைந்த பழங்கள், காய்கறிகள்: வைட்டமின் சி சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கியாகும். காய்கறிகள், பழங்கள் சைனஸ் போராட உதவும். நெல்லிக்காய், ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பூண்டு மற்றும் இஞ்சி: பூண்டு மற்றும் இஞ்சி இயற்கையான அழற்சி எதிர்ப்பு பொருட்கள். இவை சைனசில் இருந்து நிவாரணம் அளிக்கும். சமையலில் இவற்றை அதிகம் பயன்படுத்துங்கள்.
புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள்: தயிர், இட்லி, ஊறுகாய் போன்ற புளிக்க வைத்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நல்ல குடல் பாக்டீரியாக்கள் சைனஸ் உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவும்.
தண்ணீர் அதிகம் குடியுங்கள்: உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது, அடங்கிய சளியை இளகவைத்து வெளியேற்ற உதவும். போதுமான தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம்.
தவிர்க்க வேண்டியவை
பால் பொருட்கள்: சிலருக்கு பால் பொருட்கள் சளியை கெட்டிப்படுத்தலாம். சைனஸ் தொந்தரவு இருக்கும்போது பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்: புகைபிடித்தல், மது அருந்துதல் இவை இரண்டுமே சைனஸ் பிரச்சனையை மோசமாக்கும். முடிந்த வரை இவற்றை தவிர்ப்பது முழுமையான குணமடைய உதவும்.
வாசகர்களுக்கு ஒரு முக்கிய குறிப்பு
சைனஸ் பிரச்சனை என்பது எளிமையாக ஆரம்பித்து கடுமையான தொந்தரவை தரக்கூடியது. நாள்பட்ட சைனஸ் சரியாக கவனிக்கப்படாவிட்டால், மூளை தொற்று போன்ற ஆபத்தான நிலைக்கு கூட இட்டுச்செல்லலாம். எனவே, தொடர்ச்சியான சைனஸ் பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக நினைக்காமல் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.