Health Benefits of Bael Fruit வில்வம் பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன?....படிங்க....

Health Benefits of Bael Fruit நமது உடலிலுள்ள ரத்தத்தினை இது சுத்திகரிக்கிறது. ரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் இப்பழமானது முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயலிழப்பைத் தடுக்கிறது. மழைக்கால சரும நோய்களைக் குணப்படுத்தவும் வில்வம்பழம் பயன்படுகிறது.

Update: 2024-02-04 12:49 GMT

Health Benefits of Bael Fruit

மனிதர்களுக்கு என்னென்ன நோய் எப்போது வருகிறது என்பது யாருக்குமே தெரிய வாய்ப்பு இல்லை. இந்த ஒருமணி நேரம் நன்றாக இருப்பவர்கள் அடுத்த மணி நேரத்தில் திடீரென ஏதாவது ஒரு நோயால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்? அதுபோல்தான் இப்போதைய வாழ்க்கையானது நடக்கிறது.

நன்றாக ஆபீஸ் செல்வார் ஆனால் ஆபீசில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என்ற போன்குரலைக்கேட்டு பதறிப்போய் நாம் ஓடுவோம். இதுபோல் எண்ணற்ற விஷயங்கள் யாரும் எதிர்பாராமல் நிகழ்கிறது. முன்பெல்லாம் எம்டி என்று பொது மருத்துவம் படித்த டாக்டர் அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சையளிப்பார்.

ஆனால் தற்போதைய மருத்துவத்துறை முன்னேற்றத்தின் காரணமாக நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்குமே தனித்தனியாக மருத்துவ படிப்புகளும் அதனைப் படித்து விட்டுவந்த ஸ்பெஷல் டாக்டர்களும் ஏராளமானோர் உள்ளனர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள உறுப்புகளுக்கு தனித்தனியே டாக்டர்கள் கிடைக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை.

Health Benefits of Bael Fruit



கடந்த காலத்தில் அனைத்து நோய்களுக்கும் ஒரே ரோஸ்கலர் மருந்தினை மட்டுமே டாக்டர் கொடுத்துவிட்டு பின்னர் அதற்கு உண்டான மாத்திரையினை தருவார். ஆனால் காலப்போக்கில் மாத்திரை தயாரிப்புகளும் நவீன மாகியுள்ளன. மருந்துகளும் பெருகியுள்ளன. அதே சமயத்தில் நமக்கு வரும் நோய்களும் பெருக்கமடைந்துவிட்டதால் ஒவ்வொருவருமே தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிடுவதற்கு பதிலாக ஒரே நபர் 10 வியாதிகளுக்கு மருந்து எ டுத்துக்கொள்ளும் கலிகாலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாருமே மறந்துவிடக்கூடாது.

அந்த வகையில் வில்வம் பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக பார்த்துவிடுவோமா?...வாங்க...படிங்க....

தமிழகத்தில் அண்மைக்காலமாக புயல் மழை என கடந்து போய்விட்டது. வழக்கமாகவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையின் பாதிப்பு கடற்கரையோர மாவட்டங்களைப் பெரிதும் பாதிக்கும். இந்த வருடமும் அதேபோல்தான் புயல் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆபத்தின்றி கரையைக் கடந்தது. இது ஒரு புறம் என்றால் வழக்கமாகவே குளிர்காலமும் இப்போது இருப்பதால் நம் உடல் நிலையானது சற்று ஆட்டம் தான் கண்டுவிடுகிறது. அதுவும் வயதானவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. எத்தனை கவச உடைகளை அணிந்தாலும் அவர்களால் குளிர் தாங்கமுடிவதில்லை. இதுபோன்ற சீசன்களில் நம் உடல்நிலையானது நோய் எதிர்ப்பு சக்தியை அ திகம் கொண்டிருக்கும் பட்சத்தில் நம்மை எந்த மழைக்கால நோய்களும் தாக்க முடியாது. அதுவே இம்னியூட்டி பவர் நமக்கு குறைந்தால் போயே போச்சு. முதலில் சளி வரும், தும்மல், இருமல், காய்ச்சல் என களை கட்டும்போங்க...

Health Benefits of Bael Fruit


ஆகையால் மழைக்காலம் என்றில்லை பொதுவாகவே நாம் அன்றாடம் நல்லசத்தான காய்கறிகள், பழங்களை அதிக அளவில் தினந்தோறும் உண்பதால் நமக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வில்வம்பழத்தினை நாம் உண்ணலாம் என்பது பலருக்கும் இன்று வரை தெரியாது. உலகத்திலுள்ள அத்தனை பழங்களிலும் ஏதாவது ஒரு மருத்துவ குணம் நிச்சயம் இருக்கும். வில்வம்பழமும் அந்த வகையில் நம் உடல் நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைக்கொண்டுள்ளது.

மலச்சிக்கல்

வில்வம் பழத்தின் சாறானது நம் உடலின் செரிமானத்தினை அதிகம் ஊக்குவிக்க கூடியதாக உள்ளது. எனவே முடிந்தவரை இதனை அருந்த முயற்சி செய்யுங்கள். இதனால் நம் குடலில் ஏற்படும் மலச்சிக்கல், குடல்புண், வயிற்றுப்போக்கு, அஜீரணம், மற்றும் வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.

டயாபடிஸ் நோயாளிகளுக்கு

இப்பழத்திலுள்ள ஃபெரோனியாகம் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவைக்கட்டுப்படுத்துகிறது. பல ஆண்டுகளாகவே ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயைக் குறைக்க வில்வம்பழம் பயன்படுத்தப்படுகிறது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு அதிகமாகாமல் இருக்கவும் செய்யும்.

Health Benefits of Bael Fruit


நோய் எதிர்ப்பு திறன்

பொதுவாகவே பழங்கள் என்றாலே தாதுச்சத்துகள் அடங்கியது. ஒவ்வொரு பழத்திற்கும் இச்சத்துகள் வேறுபட வாய்ப்புகள் அதிகம். எல்லா பழ வகைகளிலும் வைட்டமின் சி சத்துகள் அதிகம் உண்டு. அந்த வகையில் வில்வம்பழத்திலும் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனால் நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.

மேலும் நமக்கு அன்றாடம் தொல்லை தரக்கூடிய சளி,காய்ச்சல், தலைவலி, காதுவலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதாக வில்வம்பழம் உள்ளது. இதயத்தினைப் பாதுகாக்கிறது. ரத்தஅழுத்தத்தினையும் வெகுவாக குறைக்கிறது. நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டது வில்வம்பழம்.

நம் உடலில் நடக்கும் வளர்சிதை மாற்ற செயல்களை அதிகரிக்க வில்வம்பழம் பயன்படுகிறது. சேதமடைந்த திசு, மற்றும் தசைகளை அதிகம் புரோட்டின் இருப்பதால் இது சரிசெய்கிறது. உடனடியாக நமக்கு சக்தியைக் கொடுக்கக்கூடியதாக உள்ளதால் உடலின்நீரின் அளவை ஒரே சீரான நிலையில் வைத்துக் கொள்ள இப்பழம் உதவுகிறது.

Health Benefits of Bael Fruit


ரத்த சுத்திகரணி

நமது உடலிலுள்ள ரத்தத்தினை இது சுத்திகரிக்கிறது. ரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் இப்பழமானது முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயலிழப்பைத் தடுக்கிறது. மழைக்கால சரும நோய்களைக் குணப்படுத்தவும் வில்வம்பழம் பயன்படுகிறது.

இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட வில்வம் பழத்தினை உண்ணலாம் என்பதே பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. காரணம் இது நேரிடையாக பழமாக சாப்பிடாமல் பக்குவப்படுத்தப்பட்ட மருந்தாக தரப்படுவதால்பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று கூட கருதலாம். எனவே இனியாவது விழித்துக்கொள்வோம் இதயம்,கல்லீரல், சிறுநீரகங்கள் போன்றவற்றின் சிறந்த செயல்பாட்டுக்கு வில்வம்பழம் பெரிதும் உறுதுணை புரிகிறது. இனியாவது இதனைச் சாப்பிடலாமா?....

Tags:    

Similar News