Child Catract Reason And Treatment குழந்தைகளுக்கு கண்புரை நோய் வருவது எதனால்?.....தீர்வு என்ன?...படிங்க...
Child Catract Reason And Treatment கண்புரை, ஒளிக்கதிர்கள்,விழித்திரையைச் சென்றடைவதைத் தடுத்து கண் பார்வையை இழக்கச் செய்கிறது. கண்புரை ஏற்பட்ட உடனே அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
Child Catract Reason And Treatment
மனிதர்களாக பிறந்தவர்கள் நோய்இன்றி வாழ முடியுமா? அப்படி இருக்க முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. நாம் நம் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்தினால் நிச்சயமாக வாழமுடியும். ஆனால் இதுபோன்று வாழ்ந்தவர்களின் எண்ணிக்கையானது மிக மிக குறைவே. காரணம் வயோதிகத்தினால் நம் உடல் உறுப்புகள் பழுதடைந்து நோய்களை உருவாக்குகின்றன.
நம் உடல் உறுப்புகளில் மிக மிக முக்கியமானது கண்களே. மற்ற உறுப்புகளில் ஏதாவது பிரச்னை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.ஆனால் கண்களில் பாதிப்புஏற்பட்டால் பார்வை பறிபோக வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே கண் விஷயத்தில் யாருமே அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உடனுக்குடன் செக் அப் செய்துகொள்ளுங்கள். 6 மாதம் அல்லது 1 வருட இடைவெளியில் சற்று வயதானவர்கள் செக் செய்து கொள்வது அவர்களுக்கு ஒரு முழு பாதுகாப்பே.
Child Catract Reason And Treatment
வயதான காலத்தில் வரும் நோய்களில் ஒரு சில நோய்கள் இளம் வயதினரையே தாக்கி வருகிறது. ஏன்? பிறக்கும்குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், இருதய குறைபாடுகள், கண்பார்வை கோளாறு என நோய்கள் வயது வித்தியாசம் இல்லாமல் தற்காலத்தில் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது. அந்த வகையில் குழந்தைகளுக்கு கண்களில் புரை வருமா? என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
கண்புரை என்றால் என்ன?
கண்ணிலுள்ள லென்ஸானது சில காரணங்களினால் ஒளி ஊடுருவும் தன்மையை இழக்கிறது. இதனால் கண்ணின் பார்வைத் திறன் படிப்படியாகக் குறைகிறது. இதுவே கண்புரை எனப்படும்.
பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வரும் கண்புரை, சில காரணங்களினால் , சில குழந்தைகள் பிறக்கும் பொழுதே கண்ணில் புரையோடும் பிறக்கின்றனர். இன்னும்சிலருக்கு மிகச்சிறிய வயதிலேயே இது உண்டாகிறது.
இப்புரையானது ஒரு கண்ணில் மட்டுமோ அல்லது இருகண்களிலுமோ இருக்கலாம்.
Child Catract Reason And Treatment
பாதிப்புகள்
கண்புரை, ஒளிக்கதிர்கள்,விழித்திரையைச் சென்றடைவதைத் தடுத்து கண் பார்வையை இழக்கச் செய்கிறது. கண்புரை ஏற்பட்ட உடனே அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சையைத் தாமதப்படுத்தினால், சோம்பலுற்ற கண் ஏற்பட்டு இழந்த பார்வையைத் திரும்பப் பெறும் திறன்குறைந்துவிடும்.
அறிகுறிகள்
*பார்வைக்குறைபாடு, *குழந்தையின் கண்ணின் பாப்பாவில் வெளிர் நிறம் தென்படுதல், *மாறுகண்,*அசாதாரணமான கண் அசைவுகள்
காரணங்கள்
*பரம்பரையாக வருவது,*கர்ப்பத்தின்போது தாய்க்கு ஏற்படும் தட்டம்மை போன்ற தொற்று நோய்கள், *சிலவகை ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து உபயோகப்படுத்துதல், *கருவிலேயே கண் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள், *கண்ணில் அடிபடுதல்.
சிகிச்சை முறை
*அறுவை சிகிச்சையினால் மட்டுமே இழந்த பார்வையைப் பெற முடியும் ,* மருந்து, மாத்திரைகளினால் கண்புரையை குணப்படுத்த முடியாது.
Child Catract Reason And Treatment
அறுவை சிகிச்சைக்கான காலம்
புரை ஏற்பட்டவுடன், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு சீக்கிரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோமோ அந்த அளவுக்கு பார்வை மேம்பாடு இருக்கும்.
அறுவை சிகிச்சையின் வகைகள்
*அறுவை சிகிச்சையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் *புரையை அகற்றிவிட்டு கருவிழி, *ஒட்டுக்கண்ணாடி அல்லது கண்ணாடி அணிந்துகொள்ளுதல், *புரையை அகற்றியவுடன் உள்விழி லென்ஸ் பொருத்துதல்.
அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுத்தல்
*குழந்தையின் வயது, புரையின்தன்மை, குழந்தையின் பொதுவான வளர்ச்சி, பெற்றோர்களின் புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை வைத்து குழந்தைக்கு எந்த வகை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை கண் மருத்துவர் தான் தீர்மானிக்க வேண்டும் .
*பொதுவாக 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கண்ணினுள் பாதுகாப்பாக உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது.
*ஆபரேஷனுக்குபின்பு:
*ஆபரேஷனுக்கு பின்பு குழந்தைகள் குறைந்தது 2-3 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் தங்க வேண்டும்.
*குழந்தைகளுக்குகாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் குறைந்தது 4-6 வாரங்கள் வரை கண்காணிக்க வேண்டும். கிட்டப்பார்வைக்கும் , துாரப்பார்வைக்கும் கண் கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
*ஒரு குறிப்பிட்ட வயதினை எட்டும் வரை டாக்டர் கூறும்போதெல்லாம் கட்டாயம் குழந்தைகளை பரிசோதனைக்கு அழைத்து வரவேண்டும்.
சந்தேகங்களும் விளக்கமும்
*மிகச்சிறியகுழந்தைக்கு இரு கண்களிலும் புரையிருந்தால் உடனே ஆபரேஷன் சிகிச்சை செய்ய வேண்டுமா?
Child Catract Reason And Treatment
ஆம், குழந்தைகளுக்கு இரண்டு கண்களிலும் புரை இருந்தால் கூடிய வரை சிறு இடைவெளியிலேயே இரு கண்களிலும் ஆபரேஷன் செய்வது அவசியம்.
*இரண்டு மாத குழந்தை ஆபரேஷனைத் தாங்கிக்கொள்ளுமா?
இரண்டு மாத குழந்தைகக்குக்கூட மயக்க மருந்துகொடுத்து எவ்வித சிக்கலுமின்றி புரை அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு இன்றைய மருத்துவத்துறை முன்னேறியுள்ளது. குழந்தைக்கு இருதய நோய், நுரையீரல் மற்றும் மூளை ய பாதிக்கப்பட்டிருந்தால் முறையான பரிசோதனை மூலம் குழந்தை நல டாக்டரின் பரிந்துரைப்படி ஆபரேஷனுக்கு முன் மயக்க மருந்து கொடுக்கப்படும்.
*உள்விழிலென்ஸ் வைத்து ஆபரேஷன் செய்தாலும் கண்ணாடி அணிவது அவசியமா?
கட்டாயமாக அணிய வேண்டும். குழந்தைக்கு ஏற்றவாறு சரியான அளவுள்ள கண்ணாடியைத் தேர்ந்தெடுத்த அதைத்தொடர்ந்து உபயோகிக்க வைப்பது பெற்றோர்களின் கடமை.
*சிறுகுழந்தை இவ்வகை கண்ணாடி போட்டுக்கொள்ளுமா?
குழந்தைகள் ஆரம்பத்தில் கண்ணாடி போட்டுக்கொள்ள மறுத்தாலும், கண்ணாடி வழியாக பார்வை நன்றாக தெரிவதைப் புரிந்து கொண்டவுடன் , தானே விரும்பி போட்டுக்கொள்ளும்.
Child Catract Reason And Treatment
*ஆபரேஷனுக்கு பின்னும் வேறு ஏதாவது சிகிச்சை தேவைப்படுமா?
ஆம். குழந்தையின் பார்வைத்திறனுக்குஏற்றவாறு கண்ணாடிஅணிவதோடு மட்டுமல்லாமல், ஆபரேஷனுக்குபின் சோம்பலுற்ற கண் என்ற நிலை ஏற்படுமானால், அதன் பார்வைத்திறனை, மேம்படுத்த நல்ல கண்ணை மறைத்து (பேட்சிங்) அடுத்த கண்ணுக்குபயிற்சி அளிக்க வேண்டும்.
*கண்புரை ஆபரேஷன் செய்வதால் முழுப்பார்வையைத் திரும்ப பெறமுடியுமா?
கண் புரை ஏற்பட்டதிலிருந்து ஆபரேஷன் செய்யும் இடைப்பட்ட காலம் , தொடர்ந்து கண்ணாடி பயன்படுத்தும் விதம், கண் நரம்புகளின் வளர்ச்சி இவற்றைப் பொருத்து தான் பார்வைத்திறன் அமையும்.
*நல்ல சத்தான ஆகாரமும், வைட்டமின் மாத்திரைகளும் கொடுப்பதால் கண்புரையை சரி செய்ய முடியுமா?
முடியாது.