அட்டகாசமான ஃபோன்கள்... விலை ரூ.7000 தானுங்கோ..! என்னென்ன அம்சங்கள் இருக்கு?

அட்டகாசமான ஃபோன்கள்... விலை ரூ.7000 தானுங்கோ..! என்னென்ன அம்சங்கள் இருக்கு?
X
ரூ.7000 விலையில் அறிமுகமாகும் 2 சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்!

புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ஐடியாக இருந்தால், ஜனவரி 3, 2024 ஆம் தேதியை நீங்கள் மறக்கவே கூடாது. இந்த தேதியில் தான் ரூ.7000 விலையில், 2 பெஸ்ட் மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனங்கள் அறிமுகமாகவுள்ளது.

ஐடெல் A70: இந்தியாவின் முதல் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்

ஐடெல் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் புதிதாக ஐடெல் A70 என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்கிறது. ரூ.7000 விலை புள்ளியில் வாங்க கிடைக்கும் இந்தியாவின் முதல் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாதனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 8MP செல்பி கேமரா மற்றும் பின்பக்கத்தில் 13MP HDR கேமராவை கொண்டுள்ளது. இது 5000mAh பேட்டரி அம்சத்துடன் வருகிறது.

ஸ்டோரேஜ் அடிப்படையில், ஐடெல் A70 ஸ்மார்ட்போன் சாதனம் தான் ஒரு படி மேலே உயர்ந்து நிற்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 2TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவையும் வழங்குகிறது என்பது வியப்பு.

டெக்னோ பாப் 8: இந்தியாவின் அதிவேக 8ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்

மறுகையில், டெக்னோ அறிமுகம் செய்யவிருக்கும் டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் சாதனம், இந்தியாவின் அதிவேக 8ஜிபி ரேம் கொண்ட பெஸ்ட் சாதனமாக ரூ.7000 விலை புள்ளியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் உடன் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1TB வரையிலான கூடுதல் ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 240,000 AnTuTu மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் கொண்ட 90Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 8MP செல்பி கேமரா மற்றும் 12MP AI டூயல் ரியர் கேமராவுடன் வருகிறது. இதுவும் 5000 mAh கொண்ட பேட்டரி உடன் வருகிறது.

எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது?

இந்த இரண்டு போன்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி அம்சங்களை வழங்குகிறது என்றாலும், ஸ்டோரேஜ் அடிப்படையில் ஐடெல் A70 ஸ்மார்ட்போன் சாதனம் தான் ஒரு படி மேலே உயர்ந்து நிற்கிறது. எனவே, ஸ்டோரேஜ் பற்றிய கவலையே வேண்டாம் என்றால், கட்டாயம் ஐடெல் A70 தான் சிறந்த தேர்வாக அமையும்.

ஸ்டோரேஜ் முக்கியம் இல்லை ஸ்பீட் தான் முக்கியம் என்ற வாடிக்கையாளர்கள் தாராளமாக டெக்னோ பாப் 8 போனை வாங்கலாம். பிராண்டின் தரம் வைத்து பார்க்கையில், டெக்னோ அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுடன் முன்னிலையில் உள்ளது.

பிற கவனிக்கத்தக்கூந்தவை:

இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 ஆபரேட்டிங் சிஸ்டத்தை இயக்குகின்றன.

ஐடெல் A70 மீடியா டெக் Helio G37 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, அதேசமயம் டெக்னோ பாப் 8 லைஸ் 85 ஐயால் இயக்கப்படுகிறது.

ஐடெல் A70 முக அடையாளத்தை ஆதரிக்கிறது, டெக்னோ பாப் 8 ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரைப் பயன்படுத்துகிறது.

இரண்டு சாதனங்களும் பல்வேறு இணைப்பு விருப்பங்களை வழங்குகின்றன, அதாவது வைஃபை, புளூடூத், மைக்ரோ-USB போர்ட், மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்.

பட்ஜெட் விலையில் சிறந்த சாத்தியங்களைக் கொண்ட இரண்டு சிறந்த ஸ்மார்ட்போன்களை ஐடெல் மற்றும் டெக்னோ வழங்குகின்றன. உங்கள் தேவைகளைப் பொறுத்து, ஸ்டோரேஜ் முக்கியமானதாக இருந்தால், ஐடெல் A70 சிறந்த தேர்வாக இருக்கும். வேகம் மற்றும் செயல்திறன் முக்கியமானதாக இருந்தால், டெக்னோ பாப் 8 சிறந்த தேர்வாக இருக்கும். இறுதியில், உங்கள் தனிப்பட்ட விருப்பத்தே சரியான தேர்வை உங்களுக்கு வழிகாட்டும்

Tags

Next Story