ஐடி ஊழியர்களை காலி செய்யும் கோடிங் போடும் ஏஐ டூல்!

ஐடி ஊழியர்களை காலி செய்யும் கோடிங் போடும் ஏஐ டூல்!
X
ஏஐ இப்போது மின்னல் வேகத்தில் வளரும் நிலையில், கோடிங் போடும் புதிய வகை ஏஐ டூல் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது சாப்ட்வேர் துறையில் நிச்சயம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று கூறப்படுகிறது. உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முக்கிய துறையாக ஏஐ இருக்கிறது. அதிலும் குறிப்பாக சாட்ஜிபிடி வருகை என்பது ஏஐ துறையை மொத்தமாக மாற்றி விட்டது என்றே சொல்லலாம்.

அதன் பிறகு ஏஐ சார்ந்து உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்த ஏஐ காரணமாக வேலையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படும் போதிலும், இது குறித்த ஆய்வுகளில் வேகம் குறையவே இல்லை.

புதிய ஏஐ டூல்: இதற்கிடையே ஆய்வாளர்கள் இப்போது புதிய ஏஐ டூல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ஏஐ டூல் மூலம் கோடிங் எழுதவும் முடியும். நாம் வெறுமன என்ன வேண்டும் என்பதைச் சொன்னால் போதும் அது ஒட்டுமொத்த இணையதளத்தையும் உருவாக்கி விடுமாம். கோடிங்கில் நீங்கள் என்ன கேட்டாலும் இந்த ஏஐ டூலால் செய்ய முடியுமாம். இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கே இதனால் ஐடி துறையில் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது.

இருப்பினும், ஐடி ஊழியர்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்துவது நோக்கமில்லை என்று விளக்கிய ஆய்வாளர்கள். ஐடி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதும் அவர்கள் பணியை எளிமையாக்குவதும் மட்டுமே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர். காக்னிஷன் என்ற நிறுவனம் தான் இந்த ஏஐ டூலை உருவாக்கி உள்ளது.

எல்லாமே செய்யும்: இது தொடர்பாக காக்னிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று உலகின் முதல் ஏஐ சாப்ட்வேர் இன்ஜினியரான டெவினை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டெவின் என்பது கோடிங்கை போடும் ஒரு அதிநவீன தொழில் நுட்பமாகும், முன்னணி ஏஐ நிறுவனங்கள் இதை டெஸ்ட் செய்த நிலையில், அவை அனைத்திலும் இது தேர்ச்சி பெற்றுள்ளது. டெவின் டூலால் கோடிங்கை எழுதவும் எடிட் செய்யவும் என்று கூறியுள்ளனர்.

டெவினை அதன் நம்பமுடியாத திறன் தான் மற்ற ஏஐ டூல்களில் இருந்து தனித்துக் காட்டுகிறது. இந்த ஏஐ டூலால் ஆயிரக்கணக்கான முடிவுகளை நொடிகளில் எடுக்க முடியும். மேலும், அதன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், காலப்போக்கில் மேலும் மேலும் சிறப்பாகவும் மாற முடியும். கோட் எடிட்டர், பிரவுசர் என அனைத்துமே இதன் விரல் நுனியில் உள்ளது. கோடிங் சார்ந்து எந்தவொரு கேள்வி கேட்டாலும் இது நொடிகளில் துல்லியமாகப் பதில் அளித்து விடுகிறதாம்.

ஆச்சரியம்: டெவின் நமக்கு தரும் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது. டெவின் முந்தைய ஏஐ கோடிங் மாடல்களை காட்டிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஏஐ டூல்கள் 2 சதவீதத்திற்கும் குறைவான சிக்கலான புரோகிராம்களை சரி செய்தது. ஆனால், இந்த டெவின் கிட்டதட்ட 14 சதவீத சிக்கல்களைத் தீர்த்துள்ளது. இது சாப்ட்வேர் துறையில் நிச்சயம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த டெவின் ஏஐ டூல் ஏற்கனவே அப்வொர்க் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. என்ன தான் இந்த ஏஐ டூலை உருவாக்கிய நிறுவனம் இதனால் வேலையிழப்பு நடக்காது என்று சொன்னாலும் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவே வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தளங்களில் பலர் வேலையிழந்துள்ளதாக ரிப்போர்ட்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை