/* */

விருதுநகர் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தகவல்.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.

விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தகவல்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள, கணினி நகர்புற நில ஆவணங்களில் உள்ள குறைகளை களைந்திடும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்து வது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் 31.08.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு, அரசாணை எண். 612, நாள்: 01.10.2021-ன் படி, நகர்புற நில ஆவணங்களில் கணினிமயமாக்கப்பட்ட தரவுகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யும் பொருட்டு சிறப்பு இயக்கம் நடத்தி பொங்கல் 2022 க்குள் குறைகளை முழுமையாக களைந்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கணினி தரவுகளுடன், நகர்புற நில ஆவணங்களின் தரவுகளை ஒப்பிட்டு சரிபார்த்து திருத்தம் செய்து, தீர்வு காணும் வகையில் துனை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு முகாம் நடத்திட வருவாய் வட்டாட்சியர், வட்ட துணை ஆய்வாளர், நகர சார் ஆய்வாளர் ஆகியோர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கணினியில் எளிய திருத்தங்கள் மேற்கொண்டு 2022 பொங்கள் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற பின்வரும் வழிவகைகளை பின்பற்றி பட்டா மாற்ற சிறப்பு முகாம்கள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 11.11.2021 லிருந்து 25.11.2021 வரை அன்று கீழ்கண்டவாறு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டங்களில் உள்ள நகர புல எண்கள் தொடர்பாக கணினி திருத்தம் மேற்கொள்ள வேண்டிய இனங்கள் குறித்து பொதுமக்கள் நகர சார் ஆய்வாளர் அலுவலகத்தில் நேரடியாக மனு செய்து பயன்பெறலாம். இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Nov 2021 1:30 PM GMT

Related News