காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு உருவப்படம் அமைத்து தனியார் பள்ளி மாணவர்கள் மரியாதை

திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளியில் காமராஜர் 120 என தமிழ் எழுத்துகள் வடிவில் ஓவியம் அமைத்த மாணவர்கள்
கல்விக்கண் திறந்த காமராசரின் 120வது பிறந்த நாள் விழா முன்னிட்டு திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் தனியார் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
விளையாட்டு மைதானத்தில் காமராஜர் 120 என தமிழ் எழுத்துகள் வடிவில் வரையப்பட்ட இடத்தில் அப்பள்ளியைச் சேர்ந்த எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களை அமர வைக்கப்பட்டு மாணவர்கள் அட்டையில் வரைந்த காமராஜரின் படத்தையும் காண்பித்தனர். அதைத்தொடர்ந்து காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் தாளாளர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu