வாழப்பாடியில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் காய்கறி சந்தை திறப்பு விழா

சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் மேல்தளத்தில் காய்கறி சந்தை உள்ளிட்டவை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, விவசாயிகளுக்கு தாங்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பேரூராட்சி பகுதியில் மார்க்கெட் அமைக்கிறோம்.
ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 18 முதல் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் சாலை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் பணம் கொடுப்போம் என பணம் தர மறுக்கிறார்கள்.
நம்முடைய உயிர்கொள்கை இருமொழிக் கொள்கை எனவே நீங்கள் பணம் தரவில்லை என்றாலும் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி நம்முடைய சொந்த நிதியிலிருந்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.
ஒன்றிய அரசு பணநெருக்கடியை கொடுத்தாலும் மிகச்சிறப்பான ஆட்சியை நமது முதலமைச்சர் நடத்தி வருகிறார் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu