தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐஐடி-ஜேஇஇ முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா!..

தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐஐடி-ஜேஇஇ முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா!..
X
ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐஐடி-ஜேஇஇ முதன்மை தேர்வு எழுதி, முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு : ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐஐடி-ஜேஇஇ முதன்மை தேர்வு எழுதி, முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஐஐடி-ஜேஇஇ முதன்மை தேர்வை (பேஸ்-1) எழுதினர்.இந்த தேர்வில் அப்பள்ளியின் சுகித் என்ற மாணவன் 99.79 சதவீதம் மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், பவ்யா மகேஸ்வரி என்ற மாணவி 98.26 சதவீதம் மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடமும், வர்ஷா என்ற மாணவி 96.27 சதவீதம் மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் மூன்றாமிடமும், ஆதர்ஷ் விஜய் 95.82 சதவீதம் பெற்று நான்காமிடமும், நேத்ரா 95.36 சதவீதம் பெற்று ஐந்தாமிடமும் பெற்றனர்.

சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

இதில், பள்ளியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சிவகுமார் பங்கேற்று, சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளை கவுரவித்து, நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.

தொடர்ந்து, சிவகுமார் பேசுகையில், தரமான கல்வியையும், மாணவ-மாணவிகளின் படைப்பாற்றலுக்கு ஏற்ற பல புதுமைகளை அவர்களுக்கு வழங்கி வருவதால் மனஊக்கம் மற்றும் மனநலத்துடன் பன்முக திறன்களை பெற்று இதுபோன்ற வெற்றிக்கான கல்வியை பெற முடிகிறது என்றும், மாணவ,மாணவிகளை வெற்றி பாதைக்கு உறுதுணையாய் இருந்த ஆசிரியர்களுக்கும் நன்றி கூறினார்

Tags

Next Story
ai solutions for small business