/* */

வஉசி மைதானத்துக்குள் நுழைய தடை! பொதுமக்கள் ஏமாற்றம்

விரைவில் அனைத்தையும் சரி செய்துவிட்டு பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

வஉசி மைதானத்துக்குள் நுழைய தடை! பொதுமக்கள் ஏமாற்றம்
X

பாளையங்கோட்டை வ உ சி மைதான மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாக இடிந்து விழுந்ததையடுத்து விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். விரைவில் அனைத்தையும் சரி செய்துவிட்டு பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், மாலையில் திடீரென்று மழை பெய்யத் துவங்கியது. சிறிது நேரத்தில் பயங்கர காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருநெல்வேலி நகர் பகுதிகளிலும் மழை அரைமணி நேரம் அளவுக்கு பெய்தது. திடீர் மழையுடன் காற்றும் அதிகமாக வீசியதால் மின்கம்பங்கள் சிலவற்றில் பழுதுகள் ஏற்பட்டன. மரங்கள் சில இடங்களில் முறிந்து விழந்தன. இதனால் மின்சாரம் தடைபட்டது. பின் பழுது நீக்கப்பட்டு மின்சாரம் சீரானது.

புதிய பேருந்து நிலையம் பகுதியில் முன்புறம் இருந்த பூங்காவில் இருந்த மரம் முறிந்து விழந்தது. நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அதே இடத்தில் பேருந்து நிலையத்துக்கு உள் நுழையும் பகுதியில் வளர்ந்துள்ள மரம் ஒன்றும் முறிந்து விழுந்தது.

இதுபோல மாநகரின் 20க்கும் அதிகமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மக்களுக்குபாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு மின் விநியோகத்தை சீராக்கினர்.

பாளையங்கோட்டையிலுள்ள வ உ சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை ஒன்று பயங்கர காற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பலமாக கட்டப்பட்ட அந்த இடத்தில் காற்றினால் இப்படி விபத்து ஏற்பட்டுள்ளது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டிருப்பதால் ஊழல் நடந்திருக்கக்கூடும் என மக்கள் சந்தேகிக்கின்றனர். நல்லவேளையாக அந்த நேரத்தில் யாரும் அரங்கில் இல்லாததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

மாநகராட்சி ஆணையர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட நிலையில் சில நாட்களுக்கு தற்காலிகமாக யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளனர்.

Updated On: 23 May 2023 6:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...