/* */

நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில், 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரவலாக மழை
X

 நெல்லை நகரில் மிதமான மழை பெய்துள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த நவம்பர் 3ஆம் தேதி, ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 500 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நெல்லை மாவட்டத்தில் மழை ஓய்ந்து காணப்பட்டது. புறநகரின் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது லேசான மழை பெய்தது.

இந்நிலையில், நான்கு தினங்களுக்குப் பிறகு இன்று நெல்லை மாநகரில் பல இடங்களில் திடீரென மிதமான மழை பெய்தது. ராதாபுரம், பணகுடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதன் காரணமாக பணகுடி ஆலந்துரை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 10 பேர் பத்திரமாக மீட்கபட்டனர். இன்று நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, வள்ளியூர் கல்வி கோட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில், அதிக பட்சம் ராதாபுரம் பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும் என மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.29 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழை காரணமாக, மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 94.80 சதவீதமும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 48.06 சதவீதமும் நீர் இருப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 13 Nov 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  7. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  8. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  10. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்