/* */

கஞ்சாவிற்பனை-அரிவாளுடன் ரவுடிகள்-கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்.

நெல்லையில் அரிவாளுடன் சுற்றி திரிந்த வாலிபர்கள்- காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா.

HIGHLIGHTS

கஞ்சாவிற்பனை-அரிவாளுடன் ரவுடிகள்-கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்.
X

நெல்லை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி.  

நெல்லையில் காவல்துறையில் காட்டிக்கொடுத்த நபரை வெட்டுவதற்குஅரிவாள் கொண்டு விரட்டும் காட்சிகள் பதிவான சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவிவருகிறது.

நெல்லை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உடையார்பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாரிடம் தகவல் அளித்த நபர்களை மிரட்டுவதற்காக உடையார்பட்டி மேகலிங்கபுரம் சாலையில் தாழையூத்து பகுதியை சேர்ந்த மதன் என்பவர் நண்பர்களுடன் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி வந்து மிரட்டும் தொனியில் பேசி வந்துள்ளார்.

மேலும் உடையார்பட்டி மகாலிங்கபுரம் சாலையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளை அரிவாள் கொண்டு வெட்டுவது போல மிரட்டி வந்துள்ளார் இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதை அறிந்த மதன் உள்ளிட்ட நண்பர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பயங்கர ஆயுதங்களுடன் சாலைகளில் சுற்றித் திரிந்ததாக வெள்ள பாண்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பயங்கர ஆயுதத்துடன் சாலையில் சுற்றித்திரிந்து இருசக்கர வாகன ஓட்டிகளை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதன் உள்ளிட்ட நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 20 May 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  2. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  3. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  5. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  6. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  9. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  10. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்