/* */

ஆறு உடலை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்

தொடரும் நற்சேவை

HIGHLIGHTS

ஆறு உடலை நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்
X

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சார்ந்த 76 வயது முதியவர்,கோவில்பட்டி அருகில் கிராமத்தை சார்ந்த 42 வயது பெண் , குருவிகுளத்தை சார்ந்த 50 வயது ஆண் மற்றும் பேட்டையை சார்ந்த இருவர் 70 வயது முதியவர் மற்றும் 54 வயது ஆண் உட்பட கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆறு உடல்களை அவரவர்‌ மதப்பிரகாரம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்யப்பட்டது.

சேரன்மகாதேவி அருகில் கிராமத்தை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா தொற்றால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் , இறந்தவரின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்ய உதவி கோரினர், இதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வல மீட்புக்குழுவினர் உடலை பெற்று ஆம்புலன்ஸ் மூலம் சேரன்மகாதேவி கொண்டு சென்று பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் அவர் மதப்பிரகாம் நல்லடக்கம் செய்தனர்,

இதனை‌யடுத்து கோவில்பட்டி அடுத்த கிராமத்தை சேர்ந்த 42வயது பெண் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர உயிரிழந்தார் அன்னாரது உறவினர்கள் சுகாதார துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வ குழுவினர் கோவில்பட்டி யூனிட் பொறுப்பாளர் முகம்மது யூனுஸ் தலைமையில் உடலை பெற்று இறந்தவரின் மதப்பிரகாரம்‌ பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர் .

அதேபோல தியாகராஜா நகரைச் சார்ந்த 73 வயதுடைய ஆண் கொரோணா பெருந்தொற்று அறிகுறியுடன் பாளை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று உலக சுகாதார அமைப்பின் வழிமுறைப்படி அவரது மதவழிப்படி பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மேலும் பேட்டையை சார்ந்த இருவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் அவர்களது உறவினர்கள் கேட்டு கொன்டதன் அடிப்படையில் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் பேட்டை அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதுபிரபல அரசியல் பிரமுகரின் உறுப்பினர் 50வயது ஆண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரின் உறவினர்கள் கேட்டு கொன்டதன் அடிப்படையில் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான குருவிக்குளம் கொண்டு சென்று அவரது மதவழிப்படி உலக சுகாதார அமைப்பின் வழிமுறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டதுநள்ளிரவு அதிகாலை என்று பாராமல் அயராது சமூக பணி ஆற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வ குழுவினர் பணிகளை பாரட்டி மக்கள் நன்றி தெரிவித்தனர்


Updated On: 5 May 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு