/* */

நெல்லை குன்னத்தூரில் பௌர்ணமி கிரிவலம் தடைகளை தகர்த்து பக்தர்கள் கிரிவலம்

இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் கிரிவலம் நடைபெற்றது.சங்காணி ராகு ஸ்தலம் கோதபரமேஸ்வரர் கோயில் துவங்கி குன்னத்தூர் அருள்ஜோதி மலை சுற்றி வந்து அங்கே நிறைவுபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை குன்னத்தூரில் பௌர்ணமி கிரிவலம் தடைகளை தகர்த்து பக்தர்கள் கிரிவலம்
X

பௌர்ணமி கிரிவலம் 

நெல்லை குன்னத்தூரில் பௌர்ணமி கிரிவலம் தடைகளை தகர்த்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

சுமார் ஆறு கிலோ மீட்டர் ஒன்னேகால் மணி நேரம் இந்து முன்னணி மாநில செயலாளர் திரு.கா.குற்றாலநாதன் தலைமையில் கிரிவலம் நடைபெற்றது. சங்காணி ராகு ஸ்தலம் கோதபரமேஸ்வரர் கோயிலில் துவங்கி குன்னத்தூர் அருள்ஜோதி மலையை சுற்றி வந்து அங்கேயே நிறைவுபெற்றது.

இந்து முன்னணி மாநில செயலாளர் திரு.கா.குற்றாலநாதன் தலைமையில் நடைபெற்ற கிரிவலத்தில் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி, முன்னாள் மண்டல சேர்மன் வெங்கடசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் நமச்சிவாயம் என்ற கோபி, இந்து முன்னணி மாநில பேச்சாளர் காந்திமதிநாதன் இந்து வியாபாரிகள் சங்க மாநகர தலைவர் ஆகியோர் முன்னிலையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


அனுமதி இல்லாமல் கிரிவலம் செல்வதாக பேட்டை காவல் ஆய்வாளர் ஹரிஹரன் தலைமையிலான போலீசார் பக்தர்களை வழிமறித்தனர். அவர்களிடம் வாக்குவாதம் செய்த பக்தர்கள் சாலையில் நடப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை சட்டத்தை மீறவில்லை சட்டப்படி நடக்கிறோம் எனக் கூறி கிரிவலத்தை தொடர்ந்தனர்.

பக்தர்கள் கோவிலுக்கு வரக்கூடாது என கோத பரமேஸ்வரர் திருக்கோயில் நிர்வாக அதிகாரி கோவிலை பூட்டி சென்றது பக்தர்கள் இடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.திருக்கோவில் நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் முதல் அமைச்சரிடம் மனு கொடுப்பது என பக்தர்கள் தீர்மானித்துள்ளனர்

Updated On: 23 July 2021 3:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு