/* */

தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்!

உணவு பாதுகாப்புத் துறையின் புகார் சேவை எண்ணை அனைத்து வியாபாரிகளும் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்!
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருள் விற்பனை செய்யும் ஹோட்டல், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் புகார் சேவை எண்ணைக் காட்சிபடுத்திடல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தின் உணவு வணிக நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் பதிவு செய்யும்பட்சத்தில் உரிய ஆதாரங்களைத் திரட்டி வழக்கு பதிவு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உதவியாக இருக்கும்.

சில வணிகர்கள் தங்களது வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவின் எண்ணை நுகர்வோர்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தி உள்ளனர். ஆனால், பெரும்பாலான உணவு வணிகர்கள் அவ்வாறு புகார் எண்ணை காட்சிப்படுத்தவில்லை.

அதன் விளைவாக நுகர்வோர் தாங்கள் வாங்கிய உணவுப் பொருளில் தரக்குறைபாடு காணப்பட்டாலோ அல்லது உணவுப் பொருள் கெட்டுப்போய் இருந்தாலோ சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடம் சில சமயங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

அதுமட்டுமில்லாது, சில சமயங்களில் சம்பந்தப்பட்ட உணவு வணிகரிடம் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு கோரியும் வாக்குவாதத்தில் ஈபடுகின்றனர். இதனால், அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகின்றது.

எனவே, நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதைக் கண்காணிக்க ஏதுவாகவும், நுகர்வோருக்குரிய உணவு பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னைக்கு சட்டப்படியான தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும், உணவு வணிக நிறுவனங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தி பாதுகாப்பான உணவு விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பொது சுகாதார நலனிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ஏதேனும் உணவு பாதுகாப்பு அவசர நிலை ஏற்படும்பட்சத்தில் உரிய ஆதாரங்களை திரட்ட ஏதுவாகவும் உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கிடையே சுமூக உறவு நிலவவும் உணவு வணிகர்கள் அனைவரும் தங்களது வளாகத்தின்; பணம் செலுத்துமிடத்தின் அருகில் உணவு பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க ஏதுவாக “9444042322” என்ற மாநில உணவு பாகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் புகார் சேவை எண்ணை காட்சிப்படுத்திடல் வேண்டும்.

இந்த செல்போன் எண்ணிற்கு புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும். மேலும், புகார் பெற்றுக் கொண்டதில் இருந்து 14 தினங்களுக்குள் நடவடிக்கை விபரம் சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு செல்போன் மூலம் அனுப்பப்படும். மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய குற்றமாக இருக்கும்பட்சத்தில் செல்போன் மூலம் புகார் அளித்தவர் எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளிக்க வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட நுகர்வோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலருக்கு எழுத்துப்பூர்வ புகார் அளிக்க வேண்டிய தேவை ஏற்படும் மற்றும் சாட்சியம் அளிக்கவும் நேரிடும்.

எனவே, உணவு பாதுகாப்பை மேம்படுத்திட எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு வணிகர்களும் நுகர்வோர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நுகர்வோர்கள் இந்த புகார் சேவை எண்ணை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திடல் வேண்டும்.

மேலும், யாரேனும் இந்தப் புகார் எண்ணை உள்நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Updated On: 1 March 2023 12:51 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!