/* */

இளம் வாக்காளர்களை அதிகளவு சேர்க்க வேண்டும்.. தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் வாக்காளர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டார்.

HIGHLIGHTS

இளம் வாக்காளர்களை அதிகளவு சேர்க்க வேண்டும்.. தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்...
X

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி ராஜாஜி பூங்காவில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

தேசிய வாக்காளர் தினம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 13 ஆவது வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இளம் வாக்காளர்களை அதிகமாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட நாளான ஜனவரி 25 ஆம் தேதிதான் வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெறும். ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதனைத்தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தில் இளம் வாக்காளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். வாக்காளர் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பத்திரிக்கைகள் வாக்காளர் தினம் குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்து இளம் வாக்காளர்களை அதிகளவு சேர்க்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ராஜாஜி பூங்காவில் தொடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, குரூஸ் பர்னாந்து சிலை அருகில் நிறைவடைந்தது. பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டாட்சியர்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ரகு (தேர்தல்) மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 7:24 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!