/* */

மோசடி நிதி நிறுவனத்தில் கேட்பாரற்று உள்ள வைப்புத் தொகை.. நீதிமன்றம் மூலம் திரும்பப் பெற அழைப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனத்தில் உள்ள 7 பேரின் வைப்புத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மோசடி நிதி நிறுவனத்தில் கேட்பாரற்று உள்ள வைப்புத் தொகை.. நீதிமன்றம் மூலம் திரும்பப் பெற அழைப்பு..
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் நிதிநிறுவன மோசடியில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. நிதிநிறுவன மோசடி, காசோலை மோசடி உள்ளிட்ட நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்தப் பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து திரும்பப் பெறாமல் உள்ளவர்களின் வைப்புத் தொகை பணத்தை திரும்பப் பெற தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த ராமகிருஷ்ணா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் மீது தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மூலம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு மதுரை சிறப்பு பொருளாதார நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. ஏற்கெனவே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பலர் நீதிமன்றத்தில் தங்களது விவரங்களை தெரிவித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

முதலீடு செய்தவர்களில் ஆத்தூர் மேற்கு தெருவை சேர்ந்த வீரபாண்டியன் மகள் புஷ்பம் என்பவருடைய பணம் 30,000 ரூபாய், ஆத்தூர் என்.கே பில்டிங் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணஐயர் மகன் பாலசுப்பிரமணியன் என்பவருடைய பணம் 45,000 ரூபாய், முக்காணி முதலியார் தெருவை சேர்ந்த லட்சுமண முதலியார் மகன் வேலாயுத முதலியார் என்பவருடைய பணம் 40,000 ரூபாய் திரும்பப் பெறாமல் உள்ளது.

இதேபோல, முக்காணி முதலியார் தெருவை சேர்ந்த வேலாயுத முதலியார் மனைவி சுப்பம்மாள் என்பவருடைய பணம் 22,000 ரூபாய், முக்காணி யாதவர் தெருவை சேர்ந்த வெள்ள கோனார் மகன் புலமாடன் என்பவருடைய பணம் 13,000 ரூபாய், முக்காணி வண்டிமலச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்ப முதலியார் மனைவி லட்சுமியம்மாள் என்பவருடைய பணம் 3,000 ரூபாய், முக்காணி பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் மாரிமுத்து என்பவருடைய பணம் 11,000 ரூபாய் ஆகியவை திரும்பப் பெறாமல் உள்ளது.

7 பேரின் வைப்புத் தொகை பணம் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு பொருளாதார நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்டவர்களோ அல்லது வாரிசுகளோ இந்த அறிக்கையை பார்த்த 15 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 17 Nov 2022 5:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு