/* */

சிப்காட் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சிப்காட் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சாலைகளில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் கொராேனா தடுப்பூசி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரொனா தொற்று இரண்டாவது அலையில் வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.இந்நிலையில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள 53 தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி நல அலுவலர் விந்தியா முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றன.

இது குறித்து அவர் கூறுகையில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரொனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்றிலிருந்து 4 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் 1365 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. வரும் 26ம் தேதிக்குள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.இந்நிகழ்ச்சியில் சிப்காட் திட்ட அலுவலர் லியோ வாஸ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, தூத்துக்குடி சிப்காட் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் ஜோ பிரகாஷ், செயலாளர் வினேஷ் சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 April 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?