/* */

கிறிஸ்தவ தேவாலயத்தை சீரமைக்க விரும்புகிறீர்களா? ரூ. 6 லட்சம் வழங்குகிறது அரசு

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக ரூ. 6 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிறிஸ்தவ தேவாலயத்தை சீரமைக்க விரும்புகிறீர்களா? ரூ. 6 லட்சம் வழங்குகிறது அரசு
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுடன் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் கூடுதலாக மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டடத்தில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவாலயம் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட இடம் ஆகியவை பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், 15-20 வருடமாக இருப்பின் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாகவும், 20 வருடத்திற்கு மேல் இருப்பின் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சமாகவும் நிதியுதவி வழங்கப்படும். தேவாலயத்தில் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தேவாலயம் கட்டடத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரைபடம் அனுமதி ஒப்புதல் பெறப்பட்ட ஆணை நகல் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட நாள், தேவாலய கட்டடத்தின் ஸ்திரத்தன்மை சான்றை உள்ளாட்சி அமைப்பு பொறியாளர்களிடமிருந்து பெறப்பட்டிருத்தல் அவசியம்.

மேலும், தேவாலயம் முகப்பு தோற்றம் மற்றும் பழுது ஏற்பட்டுள்ள பகுதியின் புகைப்படங்கள், தேவாலயம் சுயாதீனம் வகையாக இருப்பின் அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற்ற சான்று இணைத்தல் வேண்டும். தேவாலயம் வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை, ஐஎப்எஸ்சி, எம்ஐசிஆர் ஆகியவற்றின் ஒளி நகல் அவசியம் ஆகும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை படியிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கையுடன் பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 May 2023 7:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு