/* */

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்- 630 மெகாவாட் பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5யூனிட்கள் மூலம் 1050மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5 பிரிவுகளும் துவங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் அதனை தொடர்ந்து பழுது நீக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலையத்தில் 3 யூனிட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது இதன் காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 5 யூனிட்கள் உள்ளன. இதன் மூலம் 1 யூனிட்டுக்கு 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் 3வது அலகில் கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 2 மற்றும் 3 வது பிரிவுகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது.

Updated On: 7 May 2021 4:30 PM GMT

Related News