/* */

கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள்.. அமைச்சர் தகவல்...

கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள்.. அமைச்சர் தகவல்...
X

தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூரில் கால்நடை வளர்ப்போருக்கான கருத்தரங்கை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம் ராமானுஜம்புதூர் கிராமத்தில் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

கால்நடை பராமரிப்புத் தொழிலினை நம்பி வாழும் மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அவர்களிந் பொருளாதாரத்தினை உயர்த்த வருடத்திற்கு ஒரு கன்று என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் வகையில் 1000 ஏக்கர் மேய்க்கால் நிலங்களை மேம்படுத்துதல், 2000 ஏக்கரில் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவன உற்பத்தி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ. 3000 மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


செயற்கை முறை கருவூட்டல் பணியை மேம்படுத்துவதற்காக பொலிக் காளை நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உறை விந்து குச்சிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு வாகனங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாவட்ட கால்நடை பண்ணையில் கருமாற்று மற்றும் ஆய்வுக்கூட கருத்தரிப்பு தொழில்நுட்ப வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சிகள் ஊட்டியில் கால்நடை பண்ணையிலேயே தயாரிக்கும் வசதி கடந்த 09.03.2023 அன்று முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. கால்நடைகளின் நலனை பேணும் வகையில் தொழுவம் சென்று தொடும் சேவை - 245 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டு உள்ளது.

கால்நடை வளர்ப்போரை தொழில்முனைவோராக உருவாக்குவதற்காக பண்ணை முறையில் கோழி வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனப்பயிர் உற்பத்தி ஆகியவற்றில் தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் 14 தொழில் முனைவோரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு 5 தொழில்முனைவோருக்கு முதல் தவணை மானியம் விடுவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 2.25 லட்சம் கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் 5 வகை பசுவினங்களும், 2 எருமை இனங்களும், 10 செம்மறி ஆட்டினங்களும், 3 வெள்ளாட்டினங்களும் உள்ளன.


உள்நாட்டின கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, பர்கூர், புலிக்குளம் ஆகிய பசுவினங்களுக்கு ஆராய்ச்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொலிக் காளை நிலையங்களில் நாட்டின மாட்டு இனங்கள் பராமரிக்கப்பட்டு உறைவிந்து செயற்கை முறை கருவூட்டல் பணிக்கு வழங்கப்படுகிறது.

கால்நடை வளர்ப்போர் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலக்கை அடைய வேண்டும். கால்நடை வளர்ப்போருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான அரசு தயாராக உள்ளது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் லட்சுமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 March 2023 2:46 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்