/* */

முகக் கவசம் அணியாததால் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்

மன்னார்குடியில் பேருந்தில் பயணத்தின்போது முக கவசம் அணியாதவர்களை அதிகாரிகள் கீழே இறக்கி நடவடிக்கை எடுத்தனர்.

HIGHLIGHTS

முகக் கவசம் அணியாததால் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்
X

மன்னார்குடியில் பேருந்து பயணத்தின்போது முககவசம் அணியாதவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது . குறிப்பாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியும், அதேபோல வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் மற்றும் புனித ஸ்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சி சார்பில் நகர் நல அலுவலர் டாக்டர்.கஸ்துரிபாய் தலைமையில் சுகாதார துறை அலுவலர்கள் வெங்கடாசலம் ,சுவாமிநாதன் மற்றும் ஊழியர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் பொதுமக்கள் முககவசம் அணிவது மற்றும் பேருந்துகளில் பயணிகள் முக கவசம் இல்லமல் பயணம் செய்வோர்களை பேருந்திலிருந்து இறக்கி விட்டு முக கவசம் கடைகளில் வாங்கி அணிந்த பிறகே பேருந்தில் ஏறுவதற்கு அணிமதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் .

அதை போல் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பெருவணிக கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கடை உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதித்து வருகின்றனர்.

Updated On: 12 Jan 2022 1:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா