/* */

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடம்; அமைச்சர் திறப்பு

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடத்தினை தொழிலாளர்துறை அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடம்; அமைச்சர் திறப்பு
X

ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்த தொழிலாளர்துறை அமைச்சர் சி.வெ.கணேசன். 

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் 1140 சதுர.அடி பரப்பளவில், ஊர் காவல் படை அலுவலக கட்டிடம் ரூ.31.52 லட்சம் மதிப்பீட்டில் வட்டார தளபதி அறை, உதவி ஆய்வாளர் அறை, ஓய்வறை, அலுவலக பயன்பாட்டிற்கான கூடம் மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தினை அமைச்சர் .சி.வெ.கணேசன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் கொ.வீரராகவராவ் , மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர்.ப.சிதம்பரம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .அன்பழகன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் .தினேஷ்குமார், .சலீம் ஜாவீட், வருவாய் கோட்டாட்சியர் .பாலசந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு அமைச்சர் கணேசன் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மறைந்த திமுக தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On: 23 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!