தேனிக்குள் ஊர்ந்து செல்லும் ரயில்... பதட்டமளிப்பதாக ரயில்வே தகவல்...
தேனி நகருக்குள் ஊர்ந்து செல்லும் மதுரை ரயில். இடம்: பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயில்.
தேனி- மதுரை இடையே அகல ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து தேனி வரை இயல்பான வேகத்தில் (சுமார் 70 முதல் 80கி.மீ.,) வரும் ரயில், தேனி நகருக்குள் 4 கி.மீ., துாரத்தை பதட்டத்துடன் ஊர்ந்து கடக்கிறது.
தேனியில் கருவேல்நாயக்கன்பட்டியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை நகர் பகுதிக்குள் செல்கிறது. ஆனால் குன்னுார் ஆற்றுப்பாலத்தை கடந்ததும் ரயில் வேகத்தை மணிக்கு 20 கி.மீ., ஆக குறைத்து ஊர்ந்து வருகிறது. காரணம் தேனி நகருக்குள் பொதுமக்கள் ரயில்வே விதிகளை கடைபிடிப்பதில்லை. ரயில்வே லைனின் இருபுறமும் குடியிருப்புகள் உள்ளன. இதில் வசிக்கும் மக்கள் ரயில் வருவதை பற்றி கவலைப்படாமல், குறுக்கும் நெடுக்குமாக நடந்து வருகின்றன. ரயில்வே லைனை ஒட்டி பலரும் கால்நடைகள் வளர்க்கின்றனர். இந்த கால்நடைகள் சில நேரங்களில் ரயில்வே லைனை கடக்கின்றன. இது போன்ற பிரச்னைகளால், தேனி நகருக்குள் மிக குறைந்த வேகத்தில் ரயிலை ஊர்ந்து செல்லும் வகையில் இயக்கி வருவதாக ரயில்வே அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu