சமூக நல்லிணக்க பேரவையின் விருது வழங்கும் விழா

சமூக நல்லிணக்க பேரவையின் விருது வழங்கும் விழா
X

தேனியில் சமூக நல்லிணக்க பேரவை சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் விருதுகள் பெற்ற முக்கிய வி.ஐ.பி.,க்கள்.

தேனி சமூக நல்லிணக்க பேரவை மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் தேனி பாரத் இணைந்து முப்பெரும் விழாவை நடத்தினர்.

லயன்ஸ் கிளப் ஆப் தேனி பாரத் தலைவர் மற்றும் தென்னிந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சுபைதார் மகாராஜன் தலைமை வகித்தார். ச.ந.பேரவை செயலாளர் அன்புவடிவேல் வரவேற்றார். தொழிலதிபர்கள் சவுந்தரபாண்டியன், ஹபிபுல்லா, தேனி வழக்கறிஞர் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில செயலாளர் மணி, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

லயன்ஸ் கிளப் ஆப் தேனி பாரத் நிர்வாகிகள் பாண்டியராஜ், சீனிவாசன், சத்தியமூர்த்தி, மாணிக்கம் முன்னிலை வகித்தனர். ச.ந.பேரவை தலைவர் முகமது சபி நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

பேராசிரியர் தி.மு அப்துல் காதரின் 75வது பவள விழாவையொட்டி வெளியிடப்பட்ட கவியருவி களஞ்சியம் மலர் அறிமுக கருத்தரங்கில் முதுகலை தமிழாசிரியர்கள் முனைவர் யாழ் ராகவன். முத்துக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சமூக நல்லிணக்க சிறப்பு கருத்ரையை பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் வழங்கினார்.

விளையாட்டு துறையில் சாதனை படைத்த ஜெய் ஜஸ்வந்த், சம்ஷிதா, ரூபா ஸ்ரீ ஆகியோருக்கு எஸ்.டி முருகேசன் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனை விருதுகளில் என் ஆர் அழகராஜா விருதை பேராசிரியர் முனைவர் ஜோசப் சேவியர், பி டி ஆர் விருதை ரகுநாகநாதன். கே டி கே தங்கமணி விருதை கே. ராஜப்பன். ஹாஜி கருத்தராவுத்தர் விருதை டி ராஜமோகன் மற்றும் எம் எஸ் பிரபாகர், பாரதிராஜா விருதை லெனின் பாரதி, மு மேத்தா விருதை காமுத்துரை, என் ஆர் டி பார்த்திபன் விருதை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர்.

நன்செய் அறக்கட்டளைக்கு பென்னிகுக் விருதும் திண்ணை பயிற்சி பட்டறை மற்று பிறர் நலன் நாடுவோம் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுக்கும் மருத்துவர் கிருஷ்ணகோபால் விருதும் ஹாஜி திவான் மைதீன் விருதை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியும் பெற்றனர். ச.ந. பேரவை பொருளாளர் குழந்தைராஜ் நன்றி தெரிவித்தார்.

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை