ஆஹா.. அரசியல் சீன் மாறுதே...!!! எடப்பாடியிடம் செல்லும் காங்கிரஸ்?
Political Alliance Change?
திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு இழுபறி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் இன்னும் சில காலத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரமாக நடத்தி வருகிறது. தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் இங்கே திமுக vs அதிமுக தான் போட்டி இருக்கும்.
இதில் திமுக ஏற்கனவே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தி வருகிறது. ஏற்கனவே திமுக முஸ்லீம் லீக், கொ.ம.தே.க, கம்யூனிஸ்ட் கட்சி உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதேநேரம் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உடன் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இன்னும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்றும் இதற்கான பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் தகவல் வெளியானது. அப்படி அதிமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தால் அதிமுக நேரடியாக பாஜகவை எதிர்க்கும் "இந்தியா" கூட்டணிக்குள் வரும்.
Political Alliance Change?
அதிமுக+ காங்கிரஸ்: ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தைக்காகச் சிலர் தொடர்பு கொண்டுள்ளதாகத் தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்கிடையே அதிமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க் கொண்டு இருக்கிறது. சுமுகமான ஒன்றை எட்டிய பிறகு தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பை வெளியிடுவோம். யூகங்கள் அடிப்படையில் எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கும் கசப்பு வெளிப்பட்டுள்ளது. அந்த கசப்பிற்கான நல்ல மருந்து அதிமுகவிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும்.. பிரதமர் மோடி எம்ஜிஆர் குறித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். எம்ஜிஆர் குறித்துப் பேசி இருக்கிறார் என்றார் அது ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் உள்ளடக்கம் தான். எனவே, இதை நீங்கள் வரவேற்கவே செய்கிறோம்" என்றார்.
இந்தியா கூட்டணி: காங்கிரஸ் உடன் கூட்டணி அமைந்தால் நேரடியாக இந்தியா கூட்டணியில் அதிமுக இடம்பெறுவது தொடர்பான கேள்விக்கு வைகை செல்வன், "அது குறித்து எல்லாம் இன்னும் 2, 3 நாட்களில் நல்ல பதில் கிடைக்கும். கூட்டணி குறித்து வெளிப்படையான பதிலை 2, 3 நாட்களில் நிச்சயம் நாங்களே தருவோம். வரும் நாட்களில் எங்கள் பொதுச்செயலாளர் நல்ல செய்திகளை வரிசையாக அறிவிப்பார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வியூகங்களைத் திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய வைகை செல்வன், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது தான் இந்த கருத்துகளை அவர் தெரிவித்தார். எனவே, இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu