இவர்களுக்கும் இனி வாரிசு அடிப்படையில் அரசுப்பணி
Government Announcement
தமிழக அரசுத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் பணியின் போது இடையில் இறக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு தகுதி இருப்பின் வாரிசு பணி வழங்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு டாக்டர்கள் பணியில்இருக்கும் போது இறந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கும் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் இறக்கும் சமயத்தில், அவர்களுடைய குடும்பத்தில் உள்ள வாரிசுகள் தகுதியோடு இருந்தால் அவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும்.
ஆனால் இந்த நடைமுறை அரசு மருத்துவருக்கு பொருந்தாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அமைச்சர் மா சுப்பிரமணியம் அரசு மருத்துவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பணி காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு பணி வழங்கப்படும்.
மேலும் மருத்துவர்கள் இறந்து மூன்று வருடங்களுக்குள் பதிவு செய்தால் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்கப்படும். அனைத்து துறைகளும் கருணை அடிப்படையில் பணி தரப்படும் நிலையில் மருத்துவ துறையில் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கு வாரிசுகள் விண்ணப்பித்தால் மூன்று விதமான பணிகள் வழங்கப்பட உள்ளது. அதாவது இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் போன்ற மூன்று பணிகளில் ஒரு பணி அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu