போதைப்பொருள் புழக்கம்; இந்து எழுச்சி முன்னணி தீர்மானம்
தேனி இந்து எழுச்சி முன்னணி காரியாலத்தில் நடந்த வாரவழிபாட்டு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை காரியாலயத்தில் வார வழிபாடு கூட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் இளம்பரிதி தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் கனகுபாண்டி முன்னிலை வகித்தார். நிறுவனத்தலைவர் பொன்ரவி வழி நடத்தினார்.
வருடம் தோறும் தமிழ் புத்தாண்டான சித்திரை ஒன்றாம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய புண்ணிய ஸ்தலமான தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலையடிவார கோவிலுக்கு செல்லும் சாலையானது முற்றிலும் பழுதடைந்து அனைத்து பகுதிகளும் விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் தேனி நகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் புதிதாக தரமான சாலையை அமைக்க வேண்டுமாய் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தையும் தமிழக மக்களையும் சீரழித்த திராவிட கலாச்சாரத்தையும் திராவிட ஆட்சி தனையும் இத்துடன் தூக்கி எறிவதற்காக களமாடிக் கொண்டிருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை யின் உயரிய எண்ணம் ஈடேறுவதற்கான களப்பணி அத்துனைகளிலும் இந்து எழுச்சி முன்னணியும் அதன் பொறுப்பாளர்களும் முழுமையாக பணியாற்றுவது என சங்கல்பம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மத்திய அரசானது தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தி போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்களின் பின்புலத்தையும் அவர்களுக்கு உள்ள தொடர்புகளையும் முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அத்தனை தேச விரோத சக்திகளையும் அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் இந்த போதை கலாச்சாரத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமாய் மத்திய அரசை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாக பயங்கரவாதிகளும் பயங்கரவாத செயல்களும் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மத்திய புலனாய்வு துறை உடனடியாக சம்பந்தபட்ட பயங்கரவாதிகளையும் பயங்கரவாத அமைப்புகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்க வேண்டுமாய் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu