தேனியில் காங்., பின்வாங்க காரணம் என்ன?

தேனியில் காங்.,  பின்வாங்க காரணம் என்ன?
X
Congress Come Back From Theni தேனி லோக்சபா தொகுதியில் ராஜபாட்டை நடத்திய காங்., கட்சி தற்போது எங்களுக்கு தொகுதியே வேண்டாம் என கூறி நழுவி விட்டது.

Congress Come Back From Theni

தேனி மாவட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி கவுன்சிலர் என எந்த அரசியல் பதவியை எடுத்தாலும், அதற்கு அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு இணையாக காங்., கட்சி ராஜபாட்டை நடத்தி வந்தது.

Congress Come Back From Theni



ஆனால் இன்று காங்., கட்சியில் போட்டியிட தகுதியான தலைவர்கள் இல்லை. எனவே தொகுதியை கூட்டணியில் கேட்டுப்பெற வேண்டாம் என்று தற்போது உள்ள ஓரிரு தலைவர்களும் கூறி விட்டனர். இப்படி பலம் வாய்ந்த ஒரு கட்சி பலமிழந்ததற்கு காரணம் என்ன? தி.மு.க., அ.தி.மு.க.,விற்கு இணையாக இருந்த காங்., இப்போது அரசியலின் தரைதளத்திற்கு வந்ததற்கு காரணம். வேறு எந்த கட்சியின் சதியும் இல்லை. காங்., கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல்களே அடிப்படை காரணம்.

Congress Come Back From Theni


தேனி மாவட்டத்தில் காங்., கட்சியில் இருந்தவர்கள் தங்களை தவிர வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். காங்., கட்சிக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து அரசியல் செய்து வந்தனர். அதாவது தி.மு.க., அ.தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய காங்., கட்சியினர், அதனை செய்யாமல் தனது கட்சியின் மற்ற தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்து அவர்களை வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்தினர். இதனால் கட்சியின் வளர்ச்சியும் அடியோடு வீழ்ந்து விட்டது.

Congress Come Back From Theni


தேனி தொகுதியில் இப்படி காங்., கோஷ்டிகளாலேயே வீழ்த்தப்பட்ட காங்., தலைவர்கள் தான் அதிகம். இப்படி எதிரெதிர் கோஷ்டிகளை வீழ்த்துவதில் அக்கறை காட்டிய தலைவர்கள் தங்கள் கட்சியின் உள்கட்டமைப்பினை பலப்படுத்தி, தொண்டர்களை சேர்த்து கட்சியை வளர்க்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக காங்., கோஷ்டிகளின் சுயநலமே இன்று தேனி லோக்சபா தொகுதியில் அக்கட்சியின் வீழ்ச்சிக்கு அடிப்படை காரணமாக அமைந்து விட்டது. இனிமேலாவது தற்போது இருக்கும் தலைவர்கள் தங்கள் சக தலைவர்களுடன் நட்பு பாராட்டி, தங்களின் உண்மையான அரசியல் இலக்கு என்ன என்பதை நிர்ணயித்து, கட்சியின் அடிமட்டத்தை பலப்படுத்தி, புதிய தொண்டர்களை சேர்த்து கட்சியை பலத்தினால் மட்டுமே அக்கட்சிக்கு எதிர்காலம் உள்ளது. இல்லையென்றால் எதுவுமே இல்லை என எளிதாக கூறி விடமுடியும். இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்