/* */

வெண்ணெய் அலங்காரத்தில் வாராஹி அம்மன்

ஆஷாட நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான இன்று வாராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வெண்ணெய் அலங்காரத்தில் வாராஹி அம்மன்
X

வெண்ணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த வராஹி அம்மன். 

தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், ஒவ்வொரு அலங்காரமும் நடைபெறும். அதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 9ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும் , இந்நிலையில் எட்டாம் நாளான இன்று வெண்ணெய் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை கனி அலங்காரமும், 18 -ம் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 19 -ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோயிலுக்குள் புறப்பாடும் நடைபெறவுள்ளது.

Updated On: 16 July 2021 1:30 PM GMT

Related News