தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா பயிர்களின் நிலைமை: அரசுச்செயலர் கள ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா குறுவை சாகுபடி நிலங்களை பார்வையிட்ட அரசுச்செயலர் சமயமூர்த்தி
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களில் ஆற்று நீரின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுசெயலாளர் சி.சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் ஒன்றியத்தில் ராமநாதபுரம் கூடுதல் கிராமம் மற்றும் ராமநாதபுரம் 8 -ஆம் நம்பர் கரம்பை ஆகிய கிராமங்களில் விவசாயிகளின் நிலங்களில் நெற் பயிர்களை அரசுசெயலாளர் , மாவட்ட ஆட்சியருடன் பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் மருங்குளம் அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை யில் ஆய்வு செய்தஅரசு செயலாளர் தோட்டக் கலை செடிகளின் இருப்பு மற்றும் அவற்றை பராமரிக்கும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.
மேலும் வெட்டிக்காடு கிராமத்தில் நெற்பயிர்களை அரசு செயலாளர், மாவட்டஆட்சியருடன் பார்வையிட்டார் பின்னர் ஒரத்தநாடு வட்டம், பருத்திக்கோட்டை, தென்னமநாடு வடக்கு கிராமத்தில் குறுவை, சம்பாபயிர்களின் நிலைகுறித்துநேரில் பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்தஆய்வின் போதுவேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கோமதிதங்கம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, துணை இயக்குனர்கள் சுஜாதா, பாலசரஸ்வதி, தோட்டக்கலைத் துறைதுணை இயக்குனர் (பொ) வெங்கட்ராமன், உதவி இயக்குனர்கள் அய்யம்பெருமாள், திரு.கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் காவோி டெல்டா மாவட்டத்திலே முதன்மை மாவட்டமாக விளங்கிவரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 சதவீத மக்கள் விவசாயத்தில் மற்றும் அதன் தொடா்புடைய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தம் நிலப்பரப்பான 3.39 லட்சம் ஹெக்டோில் சுமாா் 2.69 லட்சம் ஹெக்டோில் விவசாய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் முற்போக்கு சிந்தனையும், புதிய விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், அதிக மகசூல் எடுத்து வருமானத்தை பெருக்குவதில் இம்மாவட்ட விவசாயிகள் சிறந்து விளங்குகிறாா்கள். இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 9 தாலுக்காகளையும், 14 வட்டாரங்கள் மற்றும் 906 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி உள்ளது.
இம்மாவட்டத்தில் உற்பத்தியை இருமடங்காக்கி வருமானத்தை மும்மடங்காக உயா்த்துதல். உயா்ந்து வரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு, வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து உணவு உற்பத்தி பெருக்குதல். கிராமபுறங்களில் வேலவாய்ப்பை அதிகப்படுத்துதல். தரமான விதைகள் மற்றும் இடுபொருட்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்தல். உரத்தேவையை ஒழுங்குபடுத்துதல். விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், விழப்பணா்வு கூட்டம் நடத்துதல், செயல்விளக்கங்கள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பரப்புதல். பொருளாதாரத்தை உயா்த்தும் வகையில் விவசாய பொருள்களுக்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு விவசாய துறை செயல்பட்டு வருகிறது.