/* */

புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்தியஅரசு திரும்ப பெறக்கோரி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும்

HIGHLIGHTS

புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்தியஅரசு திரும்ப பெறக்கோரி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
X

தஞ்சாவூரில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினர்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய மோடி அரசு திரும்ப பெற வலியுறுத்துவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இரா.செந்தில் நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார்.

இதில், ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை . மதிவாணன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் துணைச் செயலாளர் கே.சுந்தரபாண்டியன், அரசு போக்குவரத்து சங்க மாநில குழு உறுப்பினர் டி.கஸ்தூரி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், தெருவோர வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர். பி.முத்துக்குமரன், கட்டுமான சங்க துணை தலைவர் பி.செல்வம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்கர் நிர்வாகிகள் சரவணன் , ஆனந்தராமன், நூர் முகமது, ரமேஷ் ,ராஜா, கணேசன், ராமசந்திரன், வின்சென்ட், பிரிட்டோ, முகமது ரபிக் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆட்டோ சங்க பொருளாளர் ஆர்.மலைச்சாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மோடி அரசாங்கம் ஆட்டோ தொழிலை சீர்குலைக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

காவல் துறை, வட்டார போக்குவரத்து துறை ஆகியோரின் அநியாய ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி, நலவாரிய அலுவலகத்தில் நேரடி பொறுப்பில் பதிவை செய்து கொடுக்க வேண்டும். ஆட்டோ பயணம் அனைவருக்கும் பயன்படும் வகையில் அரசே ஆட்டோ செயலியை உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்,. 60 வயது நிறைவு பெற்ற ஆட்டோ தொழிலாளர்கள் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Updated On: 11 April 2023 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு